Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுசென்னை அணியை வீழ்த்திய குஜராத்..

    சென்னை அணியை வீழ்த்திய குஜராத்..

    நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி குஜராத் அணி வெற்றிப்பெற்றது. 

    ஐபிஎல் தொடரின் 16-ஆவது சீசன் கோலாகலமான முறையில் நேற்று தொடங்கியது. இப்போட்டியில், தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாடின. 

    இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. 

    சென்னை அணி சார்பில், தொடக்க வீரர்களாக டெவோன் கான்வே – ருதுராஜ் கெய்க்வாட் பேட்டிங் செய்ய களம் புகுந்தனர். ருதுராஜ் அதிரடியாக தொடங்க, கான்வே ஒரு ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

    பின்னர் வந்த மொயீன் அலி 24 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, ஸ்டோக்ஸ் 7 ரன்னிலும், அம்பதி ராயுடு 12 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒருபக்கம் விக்கெட்டுகள் சரிந்தாலும், மறுபக்கம் ருதுராஜ் சிக்சர் மழைகளை பொழிது அரைசதம் விளாசினார். 50 பந்துகளில் 9 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகளை பறக்கவிட்ட தொடக்க வீரர் ருதுராஜ் 92 ரன்கள் குவித்து வெளியேறினார். 

    அவருக்குப் பிறகு வந்த ஷிவம் துபே மற்றும் கேப்டன் தோனி தலா ஒரு சிக்ஸரை பறக்கவிட்டு 19 மற்றும் 14 ரன்களை எடுத்தனர். மொத்தத்தில் சென்னை அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் எடுத்தது. குஜராத் அணி தரப்பில் ஷமி, ரஷித் கான், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ஜோசுவா லிட்டில் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து, குஜராத் அணிக்கு 179 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. அந்த அணி சார்பில் விருத்திமன் சஹா 25 ரன்கள் எடுத்து வெளியேற, சுப்மன் கில் 63 ரன்கள் விளாசி பெவிலியன் திரும்பினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஹர்திக் பாண்டியா 8 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார். மேலும், சாய் சுதர்ஷன் 22 ரன்களும், விஜய் சங்கர் 27 ரன்களும் எடுத்தனர். 

    இறுதிக்கட்டத்தில், குஜராத் அணியின் வெற்றிக்கு கடைசி 6 பந்துகளில் 8 ரன்கள் தேவை என இருந்த நிலையில், 20-வது ஓவரை வீசிய துஷார் தேஷ்பாண்டே முதல் பந்தில் ஒயிடும், 2வது பந்தில் சிக்ஸர் கொடுத்தார். அடுத்த பந்தில் ராகுல் தெவாடியா பவுண்டரி விரட்டி ஆட்டத்தை முடித்து வைத்தார். இதன் மூலம், குஜராத் அணி சென்னை அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டி நகைக்கடையில் திரைப்பட பாணியில் கொள்ளை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....