Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுபட்டா கத்திகளுடன் சிக்கிய கல்லூரி மாணவர்; ரூட் தல பிரச்சனையா?

    பட்டா கத்திகளுடன் சிக்கிய கல்லூரி மாணவர்; ரூட் தல பிரச்சனையா?

    கோயம்பேடு அருகே பட்டா கத்திகளுடன் சிக்கிய கல்லூரி மாணவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    சென்னை கோயம்பேடு ரோகிணி தியேட்டர் எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் கல்லூரி மாணவர்கள் சிலர் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கோயம்பேடு காவல்துறையினரை கண்டு கல்லூரி மாணவர்கள் அந்த இடத்தில் இருந்து கலைந்து ஓட ஆரம்பித்தனர். 

    இதன் காரணமாக காவல்துறையினர், மாணவர்களை விரட்டி சென்றனர். அப்படி விரட்டியதில் ஒரு மாணவர் மட்டும் சிக்கினார். மற்ற மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 

    இதையடுத்து பிடிபட்ட மாணவரிடம் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குபின் முரணாக பதில் அளித்ததை அடுத்து, அவரிடம் இருந்த பையை சோதனை செய்ததில் 4 பட்டா கத்திகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

    பிடிபட்ட மாணவர் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் வெற்றிவேல் (19). பட்டாக்கத்திகள் இருந்த பையினை அவரது நண்பர் கொடுத்து சென்றுள்ளார் என தெரியவந்தது. 

    நேற்று பச்சையப்பன் கல்லூரி வளாகத்தில் பச்சையப்பர் 229 ஆவது ஆண்டு நினைவு விழாவும், தமிழ் பசுமை தோட்டம் தொடக்க விழாவில் மரம் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள் வீட்டுக்கு திரும்பும்போது பட்டா கத்தியுடன் சிக்கினர்.

    மேலும் ரூட் தல பிரச்சனையில் சக கல்லூரி மாணவர்களை யாரையாவது வெட்டுவதற்காக வெற்றிவேல் கத்தி வைத்திருந்தாரா? என்ற கோணத்தில் அவரிடம் தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. 

    சென்னை அணியை வீழ்த்திய குஜராத்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....