Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதேசிய கட்சியை தொடங்கிய சந்திரசேகர ராவ்; இப்பபோதே சூடுபிடிக்கிறது 2024 தேர்தல் களம்

    தேசிய கட்சியை தொடங்கிய சந்திரசேகர ராவ்; இப்பபோதே சூடுபிடிக்கிறது 2024 தேர்தல் களம்

    தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் இன்று புதிய தேசிய கட்சியை தொடங்கினார். 

    தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி 2-வது முறையாக ஆட்சியில் இருந்து வருகிறது. அங்கு, முதல்வராக சந்திரசேகர ராவ் இருக்கிறார். 

    இந்நிலையில் அவர், 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க தேசிய அளவில் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டுள்ளார். 

    இதனால், சில மாதங்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சிவசேனா கட்சியின் உத்தவ் தாக்கரே என பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களை  சந்திரசேகர ராவ் சந்தித்து பேசினார். 

    இதைத்தொடர்ந்து, கடந்த ஏப்ரல் மாதம் நடந்த கட்சியின் ஆண்டு விழாவில் தேசிய அரசியலில் தெலுங்கானா ராஷ்டிர சமிதி முக்கிய பங்கு வகிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

    அதேபோல், கடந்த மாதம் கட்சி தலைவரும் முதல்வருமான சந்திரசேகர ராவ் தேசிய அரசியலில் இறங்க வேண்டும் என கட்சியின் மாவட்ட தலைவர்கள் கேட்டுக்கொண்டனர். 

    இதையடுத்து, கடந்த மாதம் 12 ஆம் தேதி தெலுங்கானா சட்டமன்றத்தில் பேசிய போது சந்திரசேகர ராவ், தேசிய கட்சியைத் தொடங்கப் போவதாக முதன் முதலாக அறிவித்தார். 

    இந்நிலையில், இன்று (அக்டோபர் 5) தெலுங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியின் பெயரை ‘பாரத் ராஷ்டிர சமிதி’ என்று மாற்றம் செய்து, அக்கட்சியின் தலைவரான சந்திர சேகர ராவ் செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தார்.

    இதையும் படிங்க: இந்தியாவின் 4 பெரும் நகரங்களில் களம் இறங்கிய ஜியோ 5G சேவை – இனி ஸ்பீடு எப்படி இருக்கும் ?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....