Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'லவ் டுடே' திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடவுள்ள முன்னணி நடிகர்...உற்சாகத்தில் படக்குழு!

    ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ட்ரைலரை வெளியிடவுள்ள முன்னணி நடிகர்…உற்சாகத்தில் படக்குழு!

    ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை நடிகர் சிம்பு வெளியிடவுள்ளார். 

    தமிழ்த் திரையுலகில் உச்ச நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் விஜய். இவருக்கென்று பெரும் ரசிக பட்டாளம் இந்திய அளவில் உள்ளது. இவரின் திரைப்படங்கள் வெளியாகும் நாட்கள், திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. 

    விஜய் நடித்து ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில் 1997-ம் ஆண்டு வெளியான திரைப்படம்தான், ‘லவ் டுடே’ ! இத்திரைப்படத்தில், ரகுவரன், சுவலட்சுமி மற்றும் கரண் ஆகியோரும் நடித்திருந்தனர். 

    மாபெரும் வெற்றிப் பெற்ற இத்திரைப்படத்தின் டைட்டிலை, ‘கோமாளி’ திரைப்பட இயக்குநர் கைப்பற்றினார். கோமாளி திரைப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன் இயக்கத்திலும், நடிப்பிலும் உருவாகிவரும் திரைப்படத்திற்கு ‘லவ் டுடே’ என்றத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

    யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகவுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்தது. இந்நிலையில்,  ‘லவ் டுடே’ திரைப்படத்தின் ட்ரைலரை இன்று மாலை 7.02 மணிக்கு நடிகர் சிம்பு வெளியிடவுள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, இத்திரைப்படத்தில் இருந்து வெளிவந்த பாடல் இளைஞர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:‘தளபதி 67’ படத்திற்காக சென்னையில் தயாராகி வரும் பிரம்மாண்ட செட் – படப்பிடிப்பு விரைவில் துவங்கிறதா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....