Monday, April 29, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புமத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு...

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து வெளிவந்த புதிய அறிவிப்பு…

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் ஆன்லைன் முறையில் நடத்தப்படும் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) தெரிவித்துள்ளது. 

    மேலும், மத்திய அரசின் சார்பில் நடத்தப்படும் பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர, சிபிஎஸ்இ சார்பில் நடத்தப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில், 2022-ம் ஆண்டுக்கான கணினித் தேர்வு டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடத்தப்பட உள்ளது. 

    தேர்வர்களின் நுழைவுச் சீட்டில் தேர்வுக்கான சரியான தேதி குறிப்பிடப்படும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு இதற்கான ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை வரும் 31-ம் தேதி முதல் தொடங்கும் என்றும், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 24-ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இரண்டு தாள்களை கொண்ட இந்த தேர்வில் 5 ஆம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு முதல் தாள் மட்டும் எழுதினால் போதுமானது. அதேசமயம் எட்டாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு இரண்டு தாள்களும் எழுத வேண்டும். 

    விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ctet.nic.in இன் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க:சொன்னதை செய்வார் பிரதமர் மோடி! இளைஞர்களுக்கு தீபாவளி பரிசாக, அண்ணாமலை போட்ட ட்வீட்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....