Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்3 கோடி இருந்தா தீவையே வாங்கலாமா?

    3 கோடி இருந்தா தீவையே வாங்கலாமா?

    அமெரிக்காவில் நிகராகுவா பகுதியில் அமைந்துள்ள தீவு ஒன்று ரூ.3.7 கோடிக்கு விற்பனையாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    மத்திய அமெரிக்காவின் நிகராகுவா பகுதியில் தீவு ஒன்று அமைந்துள்ளது. இத்தீவு விற்பனைக்கு வரவுள்ளதாக தீவுகளை விற்பனை செய்யும் இணையதளம் ஒன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

    நிகராகுவாவின் ப்ளூ ஃபீல்ட் கடற்கரையில் இருந்து சுமார் 19.5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள ‘தி இகுவானா தீவு’ ரூ.3.7 கோடிக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    ஐந்து ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தத் தீவில் மூன்று படுக்கையறைகள், இரண்டு குளியலறைகள் கொண்ட வீடு இடம் பெற்றுள்ளதாம். நீச்சல் குளம் அமைக்கும் வசதியும் உள்ளதாம். சுற்றிலும் தென்னை மற்றும் வாழை மரங்களும் சூழ்ந்துள்ளதாம்.

    இந்தத் தீவு குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் பரவலாகி வருகிறது. இதே விலையில் இந்தியாவின் மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகர்களில் ஒரு வில்லாவே வாங்கலாம் என நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

    இந்தியாவில் ரஷ்யாவின் ஏகே-203 ரக துப்பாக்கிகள் தயாரிப்பு..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....