Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs நியூசிலாந்து; சுப்மன் கில்லின் சாதனையால் அதிகமான ஸ்கோர்

    இந்தியா vs நியூசிலாந்து; சுப்மன் கில்லின் சாதனையால் அதிகமான ஸ்கோர்

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்திய அணி சமீபத்தில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான இருபது ஓவர், ஒருநாள் தொடர்களை வென்றது. இதற்கு அடுத்ததாக சொந்த மண்ணில் நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 ஒருநாள், 3 இருபது ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    ஒருநாள் தொடர் இன்று தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இத்தொடரின் முதல் ஒருநாள் ஆட்டம் இன்று ஹைதராபாத்தில் தொடங்கியது. இப்போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோஹித் சர்மா 34 ரன்களில் வெளியேற, இதைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களிலே ஆட்டமிழந்தனர். ஆனால், வானவேடிக்கையுடன், நிதானமாக விளையாடிய சுப்மன் கில் இரட்டை சதமடித்து அசத்தினார். மொத்தத்தில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 349 ரன்கள் எடுத்துள்ளது.

    சுப்மன் கில் 109 ரன்களை எடுத்தபோது 1000 ஒருநாள் ரன்களைப் பூர்த்தி செய்தார். 18 இன்னிங்ஸில் 1000 ஒருநாள் ரன்களை எடுத்த சுப்மன் கில், இந்த இலக்கை விரைவாக எட்டிய இந்திய வீரர் என்கிற சாதனையைப் படைத்தார்.

    முன்னதாக, விராட் கோலி, 24 இன்னிங்ஸில் 1000 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அஜித்குமாரின் திரைப்படத்தில் இந்த நடிகையா? – வெளிவந்த அப்டேட்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....