Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஏவுகணைக்கு அருகில் நின்று முகச்சவரம் செய்த உக்ரைன் குடிமகன்..

    ஏவுகணைக்கு அருகில் நின்று முகச்சவரம் செய்த உக்ரைன் குடிமகன்..

    உக்ரைன்-ரஷ்யாவிற்கு இடையேயான போர் 150 நாட்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. நேட்டோ அமைப்பில் உறுப்பினராய் உக்ரைன் சேருவதற்கான முயற்சிகளைக் கைவிட வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்தி வந்தது.

    உக்ரைன், நேட்டோ அமைப்புடன் இணைவதால் தங்களது நாட்டின் பாதுகாப்பிற்கு  ஆபத்து ஏற்படலாம் என்று ரஷ்யா கூறிவந்த நிலையிலும் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, நேட்டோ அமைப்பில் சேருவதற்கான நடவடிக்கைகளில் இறங்கியதால் ரஷ்யா, உக்ரைன் மீது படையெடுத்தது.

    ரஷ்யாவின் இந்த படையெடுப்பிற்காக உலகின் பல்வேறு நாடுகளும் ரஷ்யா மீதான தங்களது கண்டனத்தினைப் பதிவு செய்து வருகின்றனர். ரஷ்யா மீது பொருளாதாரத் தடை விதித்தது மட்டுமல்லாமல், உக்ரைனிற்கு தேவையான உதவிகளையும் உலக நாடுகள் செய்து வருகின்றன.

    இந்த போரினால் உக்ரைன் நாட்டில் லட்சக்கணக்கான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். வீடுகளை இழந்தும், உடமைகளை இழந்தும் சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை அந்நாட்டு மக்களுக்கு உருவாகியுள்ளது.

    இந்த போர் சம்பந்தமாக தினம் தினம் புதுப்புது செய்திகளை நாம் பார்த்து வருகிறோம், மனித நேயத்திற்கு எடுத்துக்காட்டாகவும், ஒரு போரின் வன்முறை பற்றியும், தனி மனிதர்களின் விடா முயற்சிக்கு எடுத்துக்காட்டாகவும்  பல செய்திகள் நம் கண்ணில் பட்டு வருகின்றது.

    இந்நிலையில், தற்போது உக்ரைனில் வசிக்கும் நபர் ஒருவர் வெளியிட்டுள்ள காணொளி பலரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. இந்த காணொளியில் பெயர் தெரியாத நபர் தனது வீட்டில் விழுந்த ஏவுகணைக்கு அருகில் நின்று முகச்சவரம் செய்வது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளது.

    போரின்போது விழுந்த அந்த ஏவுகணையானது அந்த நபரின் வீட்டு கூரையினை உடைத்து வீட்டிற்குள் விழுந்துள்ளது. வெடிக்காத அந்த ஏவுகணைக்கு அருகில் நின்று எந்த வித பதட்டமும் இல்லாமல் முகச்சவரம் செய்துள்ளார்.

    A piece of a Russian ork rocket flew into the home of a Ukrainian from Damnthatsinteresting

    இந்த காணொளியினைப் பற்றி சமூக வலைத்தளத்தில் உள்ள பலரும் தங்களது கருத்தினைப் பகிர்ந்துள்ளார். ஏவுகணைக்கு அருகில் நின்றிருந்தாலும் பதட்டமின்றி காணப்படும் அந்த நபரின் நடவடிக்கைகள் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....