Sunday, March 17, 2024
மேலும்
    Homeவானிலைநாம் கடைபிடிக்க வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

    நாம் கடைபிடிக்க வேண்டிய மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

    மழை என்றால் யாருக்கு தான் பிடிக்காது; மழையும் மண்வாசமும் பலரின் மனதை கவர்கின்றன. ஆனால், அதுவே மிகுதியாய் பொழிந்தால், ஆபத்து தான்! வெள்ளம், புயல், சூறாவளி, நிலச்சரிவு போன்ற பலப் பிரச்சனைகள் நம்மை ஒருபுறம் மழையிலும் வாட்டி வதைக்கும். இது மாதிரியான சமயங்களில், கட்டாயம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுப்பதோடு அவற்றை முறையாகவும் பின்பற்ற வேண்டும். முக்கியமான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இங்கே காணலாம். 

    எலட்ரிக் ஒயர்கள்: 

    • மழைக்காலங்களில் அதிக முறை மின்சாரம் வந்து வந்து செல்லும் அந்த சமயங்களில் எக்காரணம் கொண்டும் ஒயர்களை தொடக் கூடாது. 
    • அதேபோல், வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் தண்ணீர் படும் பகுதிகளில் உள்ள எலக்ட்ரிக் ஒயர்களை தொடுதலை தவிர்க்க வேண்டும். 
    • வீட்டில் குழந்தைகள் இருக்கிறார்கள் என்றால், அவர்களை அந்தப்பக்கம் செல்லவிடாமல் தவிர்க்க வேண்டும். முடிந்தவரை மின்கசிவு ஏதேனும் தென்பட்டால், அதற்கான நபரை வரவழைத்து சரி செய்தல் நலம். 
    • குறிப்பாக, எலக்ட்ரிக் சாதனைகளின் ஒயர்களை சுவிட்ச் போடிலிருந்து எடுத்துவிட வேண்டும். சில சமயங்களில் அதிக மின்னோட்டம் ஏற்பட்டால் அப்போது தேவையில்லாத பிரச்சனைகளை இதனை செய்வதின் மூலம் தவிர்க்கலாம்.  

    மழையில் வெளியே செல்வது: 

    • பொதுவாக தூரல்கள் அல்லது லேசான மழைப் பொழிவில் வெளியே செல்வது பிரச்சனை இல்லை. 
    • ஆனால், அதிக மற்றும் மிக கனமழை நேரங்களில் வெளியே செல்வதை முற்றுலும் தவிர்க்க வேண்டும். காரணம், அந்த சமயங்களில் பல சாலைகளில் அதிக தண்ணீர் தேங்கி நிற்கும். அதுமட்டுமின்றி, பள்ளம், குழிகள் அல்லது பாதாள சாக்கடை ஏதேனும் மூடாமல் இருந்தால் நமக்கு தான் பிரச்சனை நேரும். 
    • அதே சமயத்தில், எலக்ட்ரிக் ஒயர்கள் அறுந்து தண்ணீரில் விழுந்து இருந்தால் அபோத்தும் பிரச்சனை தான். 

    இடி மற்றும் மின்னல்:

    • இடி மற்றும் மின்னல் சமயங்களிலும் வெளியே செல்வதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக, உயரமான இடங்களில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.
    • தனித்துவிடப்பட்ட மரங்கள் அல்லது தனித்துவிடப்பட்ட பொருட்களின் கீழ் இருப்பதை தவிர்த்தே ஆக வேண்டும்.
    • மேலும், நீர்த்தேக்கங்கள் உள்ளிட்ட தண்ணீர் அதிகம் உள்ள பகுதிகளின் அருகில் இருப்பதை தவிர்க்க வேண்டும். 
    • மழை நேரத்தில் சாலைகளில் இன்றைய காலங்களில் அதிக நீர்தேக்கம் ஏற்படுகிறது. அப்படியிருக்கையில், நிறைய கழிவுகள் மழை நீரில் கலந்து இருக்கும். அதில், நடக்கும் போது சிலபேருக்கு கால்களில் சேற்றுப்புண், தொற்று நோய்கள் உள்ளிட்டவை ஏற்படக்கூடும். 

    மழை நேரங்களில் வாகனங்களில் பயணிக்கும்போது,

    • வாகனத்தை மெதுவாக இயக்குதல் நல்லது. நீங்கள் பயணிக்கும் வழிகளில் ஏதேனும், பாதுகாப்பான இடமிருந்தால் அங்கு நிறுத்துவது இன்னும் நல்லது. 
    • மருந்து பெட்டகம் ஒன்றை எப்போதும் உடன் வைத்திருத்தல் நல்லது. அதுவும் மழைக் காலங்களில் அவசரத் தேவைக்கு நிச்சயம் தேவைப்படும். 
    • மிக முக்கியமாக வீட்டில் கதவுகளும் ஜன்னல்களும் சரியாக மூடப்பட்டுள்ளதா என்று பார்க்க வேண்டும். 
    • மழை வருவது போல் வானம் தோன்றினால், நீங்கள் பயணிக்கும் இடங்களுக்கு கட்டாயம் ரெயின் கோட் மற்றும் குடையை எடுத்து செல்வது நல்லது. 

    மழை காலங்களில் வீட்டில்,

    • இரவு நேரம் மின்துண்டிப்பு ஏற்பட்டால் அப்போது, வெளிச்சம் நிச்சயம் தேவைப்படும். அதற்காக மெழுவர்த்திகள், தீப்பெட்டிகள் போன்றவற்றை முன்னெச்சரிக்கையாக வாங்கி வைத்துவிட வேண்டும். 
    • குறிப்பாக புயல், வெள்ளம் குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது கைப்பேசியின் மூலமாகவோ, மின்னிணைப்பு இருந்தால் தொலைக்காட்சிகளின் மூலமாகவோ அப்போதைய சமீபத்திய செய்திகளைத் தெரிந்துக் கொள்ள வேண்டும். 
    • வெள்ளம் வரும் பகுதியாகவோ, புயல் பாதிப்பு ஏற்படும் பகுதியாகவோ, நீங்கள் இருக்குமிடம் அறிவிக்கப்பட்டால் அங்கிருந்து உடனே வெளியேறுவது நல்லது. 
    • மேலும், அத்தியாவசிய உணவுப் பொருட்களை முன்பே வாங்கி வைத்துக் கொள்ளுதல் நல்லது. 
    • கைப்பேசி மற்றும் நாம் சார்ஜ் செய்து பயன்படுத்தும் பொருட்களுக்கு மின்துண்டிப்பு ஏற்படும் முன்பே சார்ஜ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், தேவை இருந்தால் மட்டுமே இந்தப் பொருட்களை பயன்படுத்த வேண்டும். 

    மழை இன்பமே, அது வரும் சமயங்களில் பாதுகாப்போடு இருந்தால் பேரின்பமே… முன்னெச்சரிக்கையோடு இருங்கள்…

    மழை குறுக்கீட்டால் என்ன; அதிரடியால் வெற்றி வாகை சூடிய இந்தியா!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....