Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; சென்னையில் பெய்யும் தொடர் மழைக்கு மேலும் 2 பேர் பலி

    கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; சென்னையில் பெய்யும் தொடர் மழைக்கு மேலும் 2 பேர் பலி

    சென்னையில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. 

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் கடந்த திங்கள்கிழமை முதல் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் கனமழை பெய்கிறது. 

    இதனிடையே சென்னை, சௌகார்ப்பேட்டை ஏகாம்பரேஸ்வரர் அஹ்ரஹாரம் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் மழையில் ஊறிய நிலையில் இருந்து வந்தது. இந்தக் கட்டிடத்தில் மருந்து கடை, மளிகை கடை உள்ளிட்ட சில கடைகள் இருந்தன. முதல் தளத்தில் மக்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகளும் இருந்தன. இதனிடையே இந்தக் கட்டிடத்தில் ஏற்பட்ட பழுதடைவு காரணமாக வாடைக்கு வசித்து வந்த மக்கள் காலி செய்து சென்றனர். 

    இந்நிலையில், நேற்று திடீரென இந்தக் கட்டிடம் சரிந்து விழுந்தது. இதில் மருந்து கடை வைத்திருந்த சங்கர், அங்கு அவரிடம் மருந்து வாங்க வந்த கங்குதேவி, கட்டிடத்தில் அருகில் இருந்த சரவணன் மற்றும் சிவக்குமார் ஆகியோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர். 

    இதனிடையே, அருகில் இருந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர், மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது 60 யதான கங்குதேவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிறகு, இவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

    பலத்த காயமடைந்த மற்ற மூன்று பேரும் ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அதில் சங்கர் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது.

    இந்தச் சம்பவம் குறித்து பூக்கடை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    இதையும் படிங்க: இடஒதுக்கீடு விஷயத்தில் திமுகவும், காங்கிரஸூம் இரட்டை வேடம் போடுகின்றன – அதிமுக காட்டம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....