Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாமெஸ்ஸி-க்கு 30 அடி..? நெய்மருக்கு 40அடி..? கேரளாவில் இப்போதே துவங்கிய ஃபுட்பால் கொண்டாட்டம்

    மெஸ்ஸி-க்கு 30 அடி..? நெய்மருக்கு 40அடி..? கேரளாவில் இப்போதே துவங்கிய ஃபுட்பால் கொண்டாட்டம்

    கோழிக்கோட்டில் 30 அடி உயரத்திலும், 40 அடி உயரத்திலும் அமைந்த கால்பந்து வீரர்களின் கட்-அவுட்டுகள் இணையத்தில் கவனம் பெற்றுள்ளன. 

    உலகம் முழுவதும் புகழ்பெற்ற விளையாட்டு போட்டிகளில் முதன்மையானது, கால்பந்து. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரையில் கால்பந்திற்கு குறிப்பிட்ட அளவிலான ரசிகர்களே உள்ளனர். ஆனாலும், நாளுக்கு நாள் ரசிகர் வட்டம் என்பது அதிகமாகிக் கொண்டே செல்கிறது. 

    இந்தியாவிலேயே அதிக கால்பந்து ரசிகர்கள் உடைய மாநிலம் என்றால் கேரளா என்று பலரும் கூறுவர். அர்ஜெண்டினா, பிரான்ஸ், இத்தாலி நாடுகளின் கால்பந்து வீரர்களுக்கு அவர்கள் ரசிகர் மன்றங்கள் அமைத்துள்ளனர். கேரளா ரசிகர்கள் கால்பந்தின் மீது தீவிரமானவர்கள் என்றே அனைவரும் அறிவர். அதை நிரூபனம் செய்யும் வகையில் மீண்டும் கேரளாவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

    ஆம், கோழிக்கோட்டை அடுத்த செருபுழா ஆற்றின் மீது அர்ஜென்டினா நாட்டின் கால்பந்து வீரர் மெஸ்ஸியின் 30 அடி உயர கட்-அவுட்டை ரசிகர்கள் வைத்தனர். இந்த கட்-அவுட் சார்ந்த புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆனது. 

    இந்நிலையில், அதே செருபுழா ஆற்றில் பிரேசில் கால்பந்து ஜாம்பவன் நெய்மருக்கு அவரது ரசிகர்கள் கட்-அவுட் அமைத்தனர். இந்த கட்-அவுட் மெஸ்சியின் கட்-அவுட்டை விட 10 அடி உயரமாக 40 அடியில் நிறுவப்பட்டுள்ளது. தற்போது இந்த இரு கட்-அவுட்டுகளும் இணையத்தை கலக்கி வருகின்றன. 

    கால்பந்து உலகக் கோப்பை இந்த மாதம் நடைபெறுவதையொட்டியே இந்த கட்-அவுட்டுகள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....