Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஅரையிறுதிக்குள் அட்டகாசமாக நுழைந்த இங்கிலாந்து...வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா

    அரையிறுதிக்குள் அட்டகாசமாக நுழைந்த இங்கிலாந்து…வாய்ப்பை இழந்த ஆஸ்திரேலியா

    இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி உலகக் கோப்பை அரையிறுதிக்குள் நுழைந்தது.

    ஆஸ்திரேலியாவில் இன்று நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை ஆட்டத்தில் இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதைத்தொடர்ந்து, இலங்கை தொடக்க வீரர்களான பதும் நிசாங்காவும் குசால் மெண்டிஸும் விளையாடினார்கள். மெண்டிஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் 6 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. இதன்பின்பு, 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என உயர்ந்தது. 

    பதும் நிசாங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 33 பந்துகளில் அரை சதமெடுத்தார். இந்த உலகக் கோப்பையில் அவருடைய 2-வது அரை சதம் இது.  67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின்பு வந்த ஆட்டக்காரர்கள் சோபிக்க மறந்ததால், இலங்கை அணி டைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கையால் 25 ரன்களை மட்டுமே எடுத்தது. மொத்தத்தில், 

    இதையும் படிங்க: விஜய்யின் குரலில் வெளிவரவுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல்; என்ன ரெடியா?

    இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தற்போது, இங்கிலாந்து அணி 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. இந்த ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். ஆதலால் இங்கிலாந்து அணி தீவிரமாகவே விளையாடியது.

    தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ஜாஸ் பட்லர் 28 ரன்களுக்கு வெளியேற, மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் 47 ரன்கள் அடித்த நிலையில் பெவிலியன் திரும்பினார். இதன் பின்பு களமிறங்கிய வீரர்களில் பென் ஸ்டோக்ஸை தவிர்த்து எந்த வீரரும் பெரிய அளவில் ரன்கள் சேர்க்கவில்லை.

    ஆட்டக்களத்தில் கடைசி வரை தனது விக்கெட்டை பறிகொடுக்காமல் நின்ற பென் ஸ்டோக்ஸ் 42 ரன்கள் அடித்து அசத்தினார். இவரின் ஆபார ஆட்டத்தால் இங்கிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தியது. இதன் மூலம், இங்கிலாந்து அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இங்கிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளதால், ஆஸ்திரேலியா தகுதி பெறவில்லை. 

    இதையும் படிங்க: இது ‘தர்ம யுத்தம் 2.0 இல்ல.. கர்ம யுத்தம்’-ஓபிஎஸை விளாசிய ஜெயக்குமார்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....