Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் விஜய் குரலில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல்...இனி ஆட்டம்தான்!

    நடிகர் விஜய் குரலில் வெளிவந்த ‘ரஞ்சிதமே’ பாடல்…இனி ஆட்டம்தான்!

    விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள வாரிசு திரைப்படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. 

    நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்பட பணிகளில் பிஸியாகவுள்ளார். வாரிசு திரைப்படத்தை தோழா,மகரிஷி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரித்து வரும் வாரிசு திரைப்படமானது குடும்ப திரைப்படமாக உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 

    இச்சூழலில்தான், தீபாவளியை முன்னிட்டு வாரிசு திரைப்பட பாடல் வெளிவரும் என்று தகவல் வெளியானது. ஆனால், தீபாவளி அன்று பாடல்கள் எதுவும் வெளியாகாமல், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்தன. வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இந்நிலையில், தற்போது வாரிசு திரைப்படத்தின் பாடல் வெளிவந்துள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள ரஞ்சிதமே எனத் தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். வெளியாகியுள்ள லிரிக் வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் அடித்துள்ளது. 

    இதையும் படிங்க: மெஸ்ஸி-க்கு 30 அடி..? நெய்மருக்கு 40அடி..? கேரளாவில் இப்போதே துவங்கிய ஃபுட்பால் கொண்டாட்டம்

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....