Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவிபத்தில் சிக்கிய இளைஞருக்கு.. ஓடி வந்து முதலுதவி செய்த தமிழிசை; குவியும் பாராட்டுக்கள்

    விபத்தில் சிக்கிய இளைஞருக்கு.. ஓடி வந்து முதலுதவி செய்த தமிழிசை; குவியும் பாராட்டுக்கள்

    சாலை விபத்தில் காயமடைந்த இளைஞருக்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முதலுதவி அளித்தார். 

    புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது வழியில் இளைஞர் ஒருவருக்கு விபத்து ஏற்பட்டது. 

    அந்த நபர் ரத்த காயத்தில் கீழே விழுந்து கிடந்தார். கீழே கிடந்த அந்த நபருக்கு ஆளுநர் முதலுதவி அளித்து, காயங்களுக்கு கட்டுப்போட்டார். இதன்பிறகு, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அவர் செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். 

    தொடர்ந்து அவர், மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தார். 

    இது தொடர்பான காணொளியை ஆளுநர் தமிழிசை தனது வாட்ஸ் ஆப்பில்  பதிவிட்டு அதனுடன், “விபத்துக்குள்ளான இளைஞருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து மருத்துவரை தொடர்பு கொண்டு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்தேன்.

    விபத்துக்குள்ளான இளைஞருக்கு ரத்த கசிவு நிறுத்தப்பட்டு நலமுடன் இருப்பதாகவும் தகவல் கிடைத்தது. வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயமாக தலைக்கவசம் அணிய வேண்டும். அதிவேகத்தில் செல்வது, தொலைபேசியை பயன்படுத்துவதை தவிர்த்தால் விபத்துகளை தடுக்கலாம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

    தற்போது இந்தக் காணொளி வலைத்தளங்களில் பகிரப்பட்டு, பாராட்டுகளை பெற்று வருகிறது. 

    இதையும் படிங்க: ஒரே பிரசவத்தில் 3 பெண் குழந்தைகள்: விட்டுச்சென்ற பெற்றோர்கள்.! தத்தெடுத்த மருத்துவமனை.!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....