Friday, March 15, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் குரலில் வெளிவரவுள்ள 'ரஞ்சிதமே' பாடல்; என்ன ரெடியா?

    விஜய்யின் குரலில் வெளிவரவுள்ள ‘ரஞ்சிதமே’ பாடல்; என்ன ரெடியா?

    இன்று மாலை 5.30 மணியளவில் வாரிசு திரைப்படத்திலிருந்து ‘ரஞ்சிதமே’ என்ற பாடல் வெளியாகவுள்ளது. 

    நடிகர் விஜய் தற்போது ‘வாரிசு’ திரைப்பட பணிகளில் பிஸியாகவுள்ளார். வாரிசு திரைப்படத்தை தோழா,மகரிஷி போன்ற வெற்றித் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் வம்சி இயக்குகிறார். தில் ராஜூ தயாரித்து வரும் வாரிசு திரைப்படமானது குடும்ப திரைப்படமாக உருவாகிவருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    மேலும், வாரிசு திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு என்பது நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போகிறது. பொங்கலுக்கு வாரிசு திரைக்கு வருமென்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, படத்தின் அப்டேட்டுகள் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பிய வண்ணம் இருந்தனர். 

    இச்சூழலில்தான், தீபாவளியை முன்னிட்டு வாரிசு திரைப்பட பாடல் வெளிவரும் என்று தகவல் வெளியானது. ஆனால், தீபாவளி அன்று பாடல்கள் எதுவும் வெளியாகாமல், வாரிசு திரைப்படத்தின் போஸ்டர்கள் மட்டுமே வெளிவந்தன. வெளிவந்த போஸ்டர்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. 

    இருப்பினும், திரைப்படத்தின் அப்டேட் குறித்து தொடர்ந்து ரசிகர்கள் கேட்ட வண்ணமை இருந்தனர். இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் பாடல் குறித்த அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. ஆம், இன்று மாலை 5.30 மணிக்கு நடிகர் விஜய்யின் ரஞ்சிதமே பாடல் வெளியாகவுள்ளது. தமன் இசையில் உருவாகியுள்ள ரஞ்சிதமே எனத் தொடங்கும் இப்பாடலை விஜய் பாடியிருக்கிறார். இப்பாடலுக்கு விவேக் வரிகள் எழுதியுள்ளார். 

    முன்னதாக, இப்பாடல் குறித்து வெளிவந்த புரோமோ ரசிகர்களை கவர்ந்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இதையும் படிங்க: உத்தமவேடதாரி அமைச்சர் ஊருக்கு உபதேசம் செய்யலாமா? – கடுமையாக சாடிய பாஜக

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....