Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்இடஒதுக்கீடு விஷயத்தில் திமுகவும், காங்கிரஸூம் இரட்டை வேடம் போடுகின்றன - அதிமுக காட்டம்

    இடஒதுக்கீடு விஷயத்தில் திமுகவும், காங்கிரஸூம் இரட்டை வேடம் போடுகின்றன – அதிமுக காட்டம்

    இடஒதுக்கீடு விஷயத்தில் திராவிட முன்னேற்ற கழகமும், காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் நடத்துகின்றன என அதிமுக செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும் முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

    உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான இடஒதுக்கீடு விஷயத்தில் புதுச்சேரி திராவிட முன்னேற்ற கழகமும், காங்கிரஸ் கட்சியும் இரட்டை வேடம் நடத்துகின்றனர். நாடு முழுவதும் முற்படுத்தப்பட்டவர்களில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள மக்களின் நலனுக்காக 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க 2018-2019ம் ஆண்டில் பாராளுமன்றத்தில் ஒரு அவசர சட்டம் கொண்டுவரப்பட்டது. 

    பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த அவசர சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த சட்டம் செல்லும் என உச்சநீதிமன்றம் 2 ஆண்டுகளுக்கு முன்பு தீர்ப்பளித்தது.

    உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு முன்பே அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ், திமுக கூட்டணி அரசு மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் இந்த இட ஒதுக்கீட்டினை புதுச்சேரியில் அமல்படுத்தியது.

    இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பை – இலங்கை வித்திட்ட இலக்கு; அரையிறுதிக்குள் செல்லுமா இங்கிலாந்து?

    இந்த சட்டத்தை தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் அப்போது முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்கள் அமல்படுத்தவில்லை. அதை சுட்டிக்காட்டி தமிழகத்தில் இச்சட்டத்தில் அமல்படுத்தாத போது புதுச்சேரியில் ஏன் இதை அமல்படுத்துகிறீர்கள் என அதிமுக அரசின் கவனத்திற்கு கொண்டுவந்த போது காங்கிரஸ் திமுக கூட்டணியின் முதலமைச்சராக இருந்த மரியாதைக்குரிய நாராயணசாமி அவர்கள் மத்திய அரசின் இந்த சட்டத்தை நாம் எதிர்க்க முடியாது. இதை அமல்படுத்திதான் ஆக வேண்டும் என பதிலளித்தார்.

    ஆட்சியில் இருக்கும் போது, இச்சட்டத்தை அமுல்படுத்திய திமுக காங்கிரஸ் கட்சிகள் இப்பொழுது எதிர்ப்பது வியப்பாக இருக்கிறது. இந்த சட்டத்தை அமுல்படுத்தும் போது தற்போதைய திமுக அமைப்பாளர் சிவா அவர்கள் சட்டமன்றத்தில் தான் அமர்ந்திருந்தார். அப்போது ஏன் இதை எதிர்க்கவில்லை.

    இந்த சட்டத்தின்படி மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் EWS பிரிவனருக்கு 10 சதவீத இடங்களை புதுச்சேரி அரசு வழங்கும் போது தற்போது உள்ள காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திரு.வைத்திலிங்கம் அவர்கள்தான் அப்போதைய சட்டப்பேரவை தலைவராக இருந்தார்.

    தற்போது காலியாக உள்ள அரசு பணியிடங்களுக்காக ஆட்கள் தேர்வு செய்வதில் பொருளாதாரத்தில் பின் தங்கிய வகுப்பினருக்கு 10 சதவீத இடம் அளிக்கும் அரசின் உத்தரவை திரும்ப பெற முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்து ஒரு போலியான நாடகத்தை திமுக காங்கிரசும் நடத்தியுள்ளன.

    இடஒதுக்கீட்டில் பயன்பெறும் எஸ்.சி., எஸ்.டி., பிற்படுத்தப்பட்டவர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் ஆகியவர்களின் இடஒதுக்கீட்டிலிருந்து EWS பிரிவனருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவில்லை.

    இடஒதுக்கீட்டில் பயன்பெறும் சாதிகளை தவிர்த்து புதுச்சேரி மாநிலத்தில் 200-க்கும் மேற்பட்ட பிரிவினர் உள்ளனர். அதே போன்று சிறுபான்மை கிறிஸ்தவர், முஸ்லீம் சமுதாயத்திலும் முற்படுத்தப்பட்ட பிரிவினரில் வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் உள்ளனர் என்பதை அரசு கருத்தில் கொள்ள வேண்டும்.

    இதையும் படிங்க: இது ‘தர்ம யுத்தம் 2.0 இல்ல.. கர்ம யுத்தம்’-ஓபிஎஸை விளாசிய ஜெயக்குமார்

    மேலும், யூனியன் பிரதேசமான நாம் மத்திய அரசின் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். இதையெல்லாம் உணர்ந்தும், தெரிந்தும் அற்ப்ப அரசியல் ஆதாயத்திற்காக திமுகவும், காங்கிரசும் இப்பிரச்சனையை கையில் எடுத்துள்ளனர். 

    மருத்துவம் சார்ந்த உயர்கல்வியில் இப்பிரிவினரின் நலனுக்காக 10 சதவீத இடங்களை அதிகமாக ஒதுக்கியுள்ளதை போன்று அரசின் அனைத்து துறை வேலைவாய்ப்பிலும் எடுக்கப்படும் பணியிடங்களில் 10 சதவீதத்தை உயர்த்தி எடுப்பது என்பது சிறப்பான ஒன்றாகும். எனவே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மத்திய அரசின் இந்த சட்டத்தை அமல்படுத்துவது சட்டப்படி சரியானது என்பதை உணர்ந்து மற்றவர்களுக்கும் பாதிப்பில்லாத வகையில் EWS பிரிவனருக்கு வேலைவாய்ப்பில் உரிய வாய்ப்பளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....