Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடி20 உலகக் கோப்பை - இலங்கை வித்திட்ட இலக்கு; அரையிறுதிக்குள் செல்லுமா இங்கிலாந்து?

    டி20 உலகக் கோப்பை – இலங்கை வித்திட்ட இலக்கு; அரையிறுதிக்குள் செல்லுமா இங்கிலாந்து?

    இலங்கை அணி இங்கிலாந்து அணிக்கு 142 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.

    ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் இருபது ஓவர் உலகக் கோப்பை ஆட்டத்தில் இன்று இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது.

    இதைத்தொடர்ந்து, இலங்கை தொடக்க வீரர்களான பதும் நிசாங்காவும் குசால் மெண்டிஸும் விளையாடினார்கள். மெண்டிஸ் 18 ரன்களுக்கு ஆட்டமிழக்க, முதல் 6 ஓவர்களில் இலங்கை அணி 1 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் எடுத்தது. இதன்பின்பு, 10 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 80 ரன்கள் என உயர்ந்தது. 

    பதும் நிசாங்கா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அவர் 33 பந்துகளில் அரை சதமெடுத்தார். இந்த உலகக் கோப்பையில் அவருடைய 2-வது அரை சதம் இது.  67 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் பெவிலியன் திரும்பினார். அதன்பின்பு வந்த ஆட்டக்காரர்கள் சோபிக்க மறந்ததால், இலங்கை அணி டைசி 5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்ததால் இலங்கையால் 25 ரன்களை மட்டுமே எடுத்தது. மொத்தத்தில், 

    இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்தது. தற்போது, இங்கிலாந்து அணி 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது. இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றுவிட்டால் 7 புள்ளிகளுடன் நெட் ரன்ரேட் அடிப்படையில் அரையிறுதிக்கு முன்னேறும். ஆதலால் இங்கிலாந்து அணி தீவிரமாக விளையாடி வருகிறது. 

    இதையும் படிங்க: தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..! வானிலை ஆய்வு மையம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....