Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசென்னை-மைசூர்; வந்தே பாரத் ரயில்.. தொடங்கிவைப்பதற்கு முன்பாகவே மக்கள் அதிருப்தி!

    சென்னை-மைசூர்; வந்தே பாரத் ரயில்.. தொடங்கிவைப்பதற்கு முன்பாகவே மக்கள் அதிருப்தி!

    சென்னை முதல் மைசூர் வரை வந்தே பாரத் இயக்கப்படும்போது சதாப்தியை விட 30 நிமிடம் முன்பாகவே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    நாட்டில் அதிநவீன வசதிகளுடன் கூடிய 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் முதல் சேவை டெல்லி- வாரணாசி வழித்தடத்திலும், 2-வது சேவை டெல்லி-காஷ்மீரின் வைஷ்ணவி தேவி கோயில் வழித்தடத்திலும், 3-வது சேவை மும்பை-காந்தி நகர் வழித் தடத்திலும், 4வது சேவை இமாச்சலப் பிரதேசம் உனாவின் அம்ப் அண்டவ்ரா-புதுடெல்லி வழித்தடத்தில் இயக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலின் 5-வது சேவை சென்னை – பெங்களூரு-மைசூரு வழித்தடத்தில் தொடங்கப்பட உள்ளது. இந்தச் சேவை வருகிற நவம்பர் மாதம் 10 ஆம் தேதி தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன்படி சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் புதன்கிழமையை தவிர வாரத்தின் 6 நாட்களும் இயக்கப்படும். 504 கிலோ மீட்டர் தொலைவினை, மணிக்கு 75.6 வேகத்தில், 6 மணி அநேரம் 40 நிமிடங்களிலேயே இந்த வந்தே பாரத் ரயில் கடந்து விடுகிறது. 

    இந்த வந்தே பாரத் ரயில் சதாப்தி ரயிலைக் காட்டிலும் பெங்களூருக்கு 20 நிமிடம் முன்னதாவே சென்றடையும். அதேபோல் மைசூருக்கு சதாப்தி ரயிலைக் காட்டிலும் 30 நிமிடங்கள் முன்பாகவே சென்றடையும். 

    வந்தே பாரத் ரயில் மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகம் அவரை செல்லக்கூடியது. இந்நிலையில், ஏன் வேகம் குறைவாக செல்கிறது என்ற கேள்விக்கு,

    சென்னை-பெங்களூரு வழித்தடத்தில் லெவல் கிராசிங்குகள், ரயில் வழித்தடங்களை ஒட்டி பல இடங்களில் தடுப்புச்சுவர் கட்டப்படாமல் இருப்பது, நகர்ப் பகுதிகள் அதிகம் இருப்பது போன்றக் காரணங்களால் மணிக்கு 75.6 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே வந்தீ பராஅத் ரயில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்னும் மிக விரைவில் இந்த ரயிலின் மூலம் பெங்களூருக்கும், மைசூருக்கும் செல்ல முடியும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த தகவல் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: டி20 உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவை அலறவிட்ட ஆப்கானிஸ்தான்! கடைசி ஓவரில் த்ரில் வெற்றி 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....