Sunday, March 17, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரீசார்ஜ் திட்டம்; ஆனால் இது இவர்களுக்கு மட்டும்தானாம்..

    பிஎஸ்என்எல் அறிமுகப்படுத்திய புதிய ரீசார்ஜ் திட்டம்; ஆனால் இது இவர்களுக்கு மட்டும்தானாம்..

    பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

    அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) மக்களுக்காகப் பல திட்டங்களை வழங்கி வருகிறது. இந்நிலையில், தற்போது புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, ரூ.321 விலையில் 365 நாள் வேலிடிட்டியை வழங்குகிறது என்பது போக மற்றொரு சிறப்பை கொண்டுள்ளது. 

    இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இது ஒரு முழு வருடத்திற்குச் செல்லுபடியாகும் 365 நாட்கள் வேலிடிட்டி உடன் வருகிறது. ஆம், இந்த திட்டம் பிஎஸ்என்எல் சிம்மை ஒரு வருடம் முழுவதுமாக செயலில் வைத்திருக்க உதவுகிறது. 

    ஆனால், பிஎஸ்என்எல் அறிவிப்பின் படி, இந்த திட்டம் சராசரி மக்களுக்குக் கிடைக்கப்போவதில்லை. ஆம், பிஎஸ்என்எல் புதிதாக அறிமுகம் செய்துள்ள இந்த அட்டகாசமான திட்டம் தமிழகத்தில் பணிபுரியும் காவல்துறை அதிகாரிகளுக்காக அறிமுகம் செய்துள்ளது. 

    இந்த பிஎஸ்என்எல் ரூ.321 திட்டம் தமிழகக் காவல்துறை அதிகாரிகளுக்கு மட்டுமே கிடைக்கிறது. இந்த திட்டம் இரண்டு காவல் அதிகாரிகளுக்கு இடையே தொடர்பு நடக்கும் போது பயனர்களுக்கு இலவச அழைப்பு நன்மையை வழங்குகிறது. மற்ற நேரத்தில் நிமிடத்திற்கு 7 பைசா வசூலிக்கப்படுகிறது. இது உள்ளூர் பிஎஸ்என்எல் நெட்வொர்க்கில் இருக்கும் போது வசூலிக்கப்படும். அதேபோல்,எஸ்டிடி அழைப்புகளுக்கு நிமிடத்திற்கு 15 பைசா வசூலிக்கப்படும்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....