Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்132 பயணிகளுடன் விபத்துக்குள்ளான சீன விமானம் : உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா ?

    132 பயணிகளுடன் விபத்துக்குள்ளான சீன விமானம் : உயிர் பிழைப்பதற்கான வாய்ப்பு உள்ளதா ?

    சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸைச் சேர்ந்த 737-800 என்ற உள்நாட்டு விமானம் 132 பயணிகளுடன் தெற்கு சீனாவில் உள்ள மலைப்பகுதியில் சென்றுகொண்டிருந்த பொழுது, திங்கட்கிழமையான இன்று விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் கூட பிழைத்ததற்கான சாத்தியக்கூறுகள் இல்லை என்று மீட்புப்பணியாளர்கள் கூறியதாக சீன ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. யுனானி மாகாணத்தின் தலைநகரான குன்மிங்க்கின் தென்மேற்கு நகரத்திலிருந்து ஹாங்காங் எல்லையில் உள்ள குவாங்டாங்கின் தலைநகரான குவாங்சோவுக்கு விமானம் புறப்பட்டுச் சென்ற பொழுது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கான காரணம் இதுதான் என்று இதுவரை எதுவும் கண்டறியப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

    விமானம் விபத்துக்குள்ளானதை உறுதிப்படுத்திய ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனம், விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்களின் விவரங்களை வழங்கியுள்ளது. விமானம் விழுந்து நொறுங்கியதில் சுற்றி இருந்த மூங்கில் மரங்கள் தீப்பிடித்து எரிந்து வருகின்றன. அந்த குப்பைகளுக்குள் ஒருவர் கூட பிழைக்க வாய்ப்பில்லை என அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்கள் கூறி வருகின்றனர். 123 பயணிகள் மற்றும் 9 பணியாளர்களுடன் பறந்து கொண்டிருந்த விமானம் வுஜோ நகரத்தின் மேல் பறந்து கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்ததாக சீனாவின் சிவில் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் ஆப் சீனா என்ற நிறுவனம் தெரிவித்துள்ளது. குன்மிங்க்கிலிருந்து மதியம் 1.11 மணியளவில் புறப்பட்ட விமானம் மதியம் 3.05 மணிக்கு குவாங்சோவில் தரையிறங்குவதாக இருந்தது. 

    விமான ரேடாரின் தகவலின் படி ஆறு ஆண்டுகள் பழமையான இந்த விமானம் 0620 GMT, மணிக்கு 29,100 ஆதி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. 2 நிமிடங்கள் 15 வினாடிகளுக்குப் பின்னர் 9,075 அடிக்கும் கீழே இறங்கியதாகக் காட்டியிருக்கிறது. அடுத்த 20 வினாடிகளில் அதன் உயரம் 3225 அடி உயரமாக  குறைந்துள்ளது. இதன் அடிப்படையில் பார்க்கையில் 31000 அடி உயரத்தில் செங்குத்தாக கீழே இறங்கியிருக்கிறது. விபத்தின் போது அப்பகுதியில் வானிலை ஓரளவு மேகமூட்டத்துடன் நன்றாகத்தான் இருந்துள்ளது. விபத்துக்கான உண்மையான காரணம் மற்றும் விமான பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு சீன நாட்டின் பிரதமர் ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தினால் போயிங் கோ நிறுவனத்தின் பங்குகள் 6.4% குறைந்து $180.44 டாலராக மாறியுள்ளது. இதுகுறித்து போயிங் நிறுவனம் எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருகிறது. அதே நேரத்தில் சைனா ஏர்லைன்ஸின் பங்குகளும் உலக சந்தையில் 6.5% குறைந்துள்ளன. மேலும் யு.எஸ் பட்டியலிடப்பட்ட பங்குகள் சந்தைக்கு முந்தைய வர்த்தகத்தில் 17% குறைந்துள்ளன.  

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....