Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுடாடா ஐபிஎல் போட்டியில் புதிதாக களமிறங்கும் லக்னோ ஜெயண்ட்ஸ் அணியின் விவரங்கள் உள்ளே!

    டாடா ஐபிஎல் போட்டியில் புதிதாக களமிறங்கும் லக்னோ ஜெயண்ட்ஸ் அணியின் விவரங்கள் உள்ளே!

    டெஸ்ட், ஒருநாள் போட்டி, இருபது ஓவர் என பலவாக ரசித்துப் பாரக்கப்படும் விளையாட்டுதான், கிரிக்கெட். இந்த கிரிக்கெட் விளையாட்டிலும் பலராலும் விரும்பி பார்க்கப்படும் இந்தியன் ப்ரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகள் வருகின்ற மார்ச் மாதம் 26 ஆம் தேதி கோலகலமாக தொடங்க இருக்கிறது. பலத்த எதிர்ப்பார்ப்புகளுடன் தொடங்க இருக்கும் இந்த வருட ஐபிஎல் போட்டியை டாடா நிறுவனம் ஸ்பான்சர் செய்கிறது. இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் பத்து அணிகள் பங்கேற்கிறது. இம்முறை புதிதாக குஜராத் டைட்டன்ஸ் அணியும், லக்னோ ஜெயண்ட்ஸ் அணியும் களமிறங்க உள்ளது. உத்தரபிரதேசத்தின் தலைநகரான லக்னோவை தலைமையிடமாக கொண்டதுதான், லக்னோ ஜெயண்ட்ஸ்.

    புதிதாக களமிறங்கும் லக்னோ ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக கே.எல்.ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னும் பஞ்சாப் அணியில் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த கே.எல்.ராகுலை இவ்வருடம் நடைபெற்ற ஏலத்தின் போது லக்னோ அணி வாங்கியது. கே.எல்.ராகுல் பேட்ஸ்மெனாக மட்டும் இல்லாமல் அணியின் கேப்டனாகவும் சிறந்து விளங்க வேண்டிய நேரமாக இந்த ஐபிஎல் போட்டியுள்ளது.

    மேலும், லக்னோ ஜெயண்ட்ஸ் அணியில் இந்தியாவைச் சார்ந்த மனன் வோஹ்ரா, மணிஷ் பாண்டே ஆகியோர் பேட்ஸ்மெனாகவும், பந்துவீச்சாளர்களுக்கு ரவி பிஷ்னாயி, ஷபாஸ் நதீம், முகுசின் கான், மயங்க் யாதவ், அன்கிட் ராஜ்பூட், ஆவேஷ் கான், கரண் சர்மா, தீபக் ஹூடா, கௌதம், ஆயுஷ் பதோணி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடிய குருணால் பாண்ட்யா ஆல்-ரவுண்டராக லக்னோ ஜெயின்ட்ஸ் அணியில் விளையாட உள்ளனர். அண்டை நாடுகளில் இருந்து மேற்கிந்திய தீவுகள் அணியின் ஆல்-ரவுண்டர்களான ஜேசன் ஹோல்டர், கைல் மேயர்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அதேப்போல் ஆஸ்திரேலிய அணியின் மார்கஸ் ஸ்டோனிஸூம் ஆல்-ரவுண்டராக லக்னோ ஜெயின்ட்ஸ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

    பந்துவீச்சாளர்களாக, இங்கிலாந்தைச் சார்ந்த மார்க் வூட்டும், இலங்கையைச் சார்ந்த துஷ்மந்த சமீராவும் விளையாட உள்ளனர். தென்னாப்ரிக்காவைச் சார்ந்த குயின்டன் டிகாக்கும், மேற்கிந்திய தீவுகளின் எவின் லூயிஸூம் இடம்பெற்றுள்ளனர்.

    சிம்பாப்வே நாட்டின் முன்னாள் கிரிக்கெட் ஆண்டிர்வ் பிளவர் அவர்கள் லக்னோ ஜெயின்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை களமிறங்க இருக்கும் ஜெயண்ட்ஸ் அணியின் மீது எதிர்ப்பார்ப்பு உள்ளது. ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை லக்னோ ஜெயண்ட்ஸ் அணி பூர்த்தி செய்யுமா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....