Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் முதல் பணக்காரராய் இருந்தாலும் என்னிடம் இருந்து தப்ப முடியாது - பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று!

    உலகின் முதல் பணக்காரராய் இருந்தாலும் என்னிடம் இருந்து தப்ப முடியாது – பில்கேட்ஸூக்கு கொரோனா தொற்று!

    பில் கேட்ஸ் மைக்ரோசாஃப்ட் நிறுவனர்களில் ஒருவர். கோர்பிஸ் நிறுவனத்தினையும் நிறுவியுள்ள இவர் போர்ப்ஸ் இதழின்படி உலகின் முதல் பணக்காரர் என்று அறியப்படுகிறார். உலகின் பெரும் செல்வந்தர்கள் பட்டியலில் தொடர்ந்து 12 ஆண்டுகளாக இவர் முதல் இடத்தினைப் பெற்றுள்ளார்.

    இந்நிலையில், மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. “லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக பில்கேட்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மீண்டும் தனது உடல்நிலை பழையபடி திரும்பும் வரை பில் கேட்ஸ் தனிமையில் இருப்பார் என்று தெரிகிறது.

    மேலும், “நல்வாய்ப்பாக நான் இரண்டு தவனை தடுப்பூசியுடன் பூஸ்டர் டோசும் போட்டுக்கொண்டேன். எனக்கு கொரோனா வந்திருக்கும் இந்த சமயத்தில் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவ வசதி இருக்கிறது” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

    கொரோனா கொள்ளை நோய் பரவத் தொடங்கிய பிறகு கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பான பணிகள் குறித்து பில் கேட்ஸ் தொடர்ந்து பேசியும், பரப்புரை செய்தும் வருகிறார்.

    மேலும், அவரது கேட்ஸ் ஃபவுண்டேஷன் ஏழை நாடுகளுக்கு கொரோனா மருந்துகளை வழங்க 120 மில்லியன் டாலர் செலவிடும் என கடந்த அக்டோபர் மாதத்தில் அறிவித்து இருந்தது. பில் கேட்ஸ் தனது மனைவி மிலின்டாவை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவகாரத்து செய்தார்.

    “விவாகரத்துக்குப் பின் திருமணம் செய்துகொள்ளும் எண்ணம் உண்டா ?” என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு தனியார் தொலைக்காட்சி ஒன்று 66 வயதாகும் பில் கேட்ஸிடம் கேள்வியெழுப்பியது “அப்படி திருமணம் செய்து கொண்டால் யாரை திருமணம் செய்ய ஆசைபடுவீர்கள்” என்றும் கேட்டது.

    இதற்கு பதிலளித்த பில் கேட்ஸ் “தனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லையென்றும். வாய்ப்பிருந்தால் மீண்டும் மெலின்டாவுடன் வாழவிரும்புவதாகவும்” தெரிவித்திருந்தது குறிப்படத்தக்கது.

    மிலின்டா கேட்சை விவாகரத்து செய்த பிறகு கேட்ஸ் அறக்கட்டளையின் நிர்வாகக் கூட்டம் இரண்டு ஆண்டுகள் கழித்து முதல்முறையாக இன்று நடைபெறும் நிலையில் பில் கேட்ஸ் அதில் கலந்து கொள்ள முடியாமல் போக, இருப்பினும் இணையவழியாக அதில் பங்கேற்க இருப்பதாக பில் கேட்ஸ் அறிவித்திருக்கிறார்.

    ஜடேஜாவுக்கு என்ன ஆச்சு? ஐபிஎல் தொடரிலிருந்து ஏன் விலகினார் ஜடேஜா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....