அனைத்து வகையான காய்களையும் பழங்களையும் உண்பது உடல் நலத்திற்கு நல்லது தான். அதிலும் குறிப்பாக மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறக் காய்கள் மற்றும் பழங்களில் அதிக ஊட்டச் சத்துக்கள் அதிகம் இருக்கின்றன. பொதுவாக மஞ்சள் நிறக் காய்கள் மற்றும் பழங்களில் குறிப்பாக பொட்டாசியம், பிளவோனாய்டுகள், ஜியாக்சண்டின், வைட்டமின் சி மற்றும் லைகோபீன் போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன.
- வைட்டமின் சி இருப்பதால் நமது கண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கண்ணில் இருக்க கூடிய இரத்தச் செல்களை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் விழிப்புள்ளி சிதைவு ( macular degeneration ) வரமால் தடுக்க உதவுகிறது.
- வைட்டமின் சி தோலில் கோலேஜின் உருவாக உதவி செய்கிறது. இந்த கோலேஜின் உடலில் புரதத்தை உற்பத்தி செய்வதால் தோல் மிகவும் உறுதியாகவும்
மீள்சக்தியுடனும் இருக்க உதவுகிறது. பூசணிக்காய் என்கிற பரங்கிக்காயில் அதிக வைட்டமின் சி இருப்பதால் இது கோலேஜின் ( collagen ) உருவாக உதவி செய்யும். இதனால் தோல் மிகவும் அழகாகவும் மென்மையாகவும் தோன்றும். ஆரஞ்சு, வாழைப்பழம், மாம்பழம், சோளம் போன்றவையும் கோலேஜின் உருவாக உதவும்.
- வாழைப்பழம், ஆரஞ்சு, மாம்பழம், ஆப்ரிகாட் போன்ற பழங்களில் பொட்டாசியம் இருப்பதால் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. பொதுவாகவே புளிப்பு மிக்க பழங்கள் இரத்த அழுத்த அளவினை குறைக்க வல்லது.
- இஞ்சியில் இயற்கையான வேதிப்பொருள்கள் மற்றும் எண்ணெய் இருப்பதால் அது தேவையற்ற கொழுப்புகளைக் குறைக்க உதவுகிறது. மேலும் ஆரஞ்சுகளில் பைட்டோஸ்டெரால்ஸ் என்ற வேதிப் பொருள் இருப்பதால் குடலில் இருக்கும் செல்கள் கொழுப்பை உறிஞ்சுவதை தடுக்கிறது.
- விதைப்பை புற்றுநோய் ( prostate cancer ) வரமால் தடுக்கிறது. இது நடுத்தர ஆண்களுக்கு வரும் புற்று நோய் ஆகும். இதை எதிர்கொள்ள அதிகமான ஆக்சிஜனேற்ற சத்துக்களான வைட்டமின் சி, பீட்டா காரோடீன் நிறைந்த உணவுப் பொருள்களான கேரட், மாம்பழம் போன்றவற்றை உண்ணலாம்.
- ஆக்சிஜனேற்ற வைட்டமின் சி குருத்தெலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. இதன் பற்றாக்குறையால் கீழ் வாதம் என்கிற மூட்டு வலி வருகிறது. வைட்டமின் சி நிறைந்துள்ள ஆரஞ்சு, முலாம்பழம், மஞ்சள் ஆரஞ்சு நிறம் கொண்ட குடைமிளகாய், அன்னாச்சிப்பழம் போன்றவற்றை உண்ணலாம்.
- வைட்டமின் எ, வைட்டமின் சி ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ள மஞ்சள் குடைமிளகாய்கள், ஆப்ரிகாட், கிராப் ப்ரூட், போன்ற பழங்களை உண்பது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கும். அதுமட்டுமில்லாமல் இறந்த செல்களை அழித்து புதிய செல்களை உருவாக்கவும் உதவிச் செய்யும்.
- மேலும் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்களை உண்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இந்தப் பழங்களில் காரோட்டினாய்ட்ஸ் இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியின் நிகழ்வை சீராக வைத்திருக்க உதவும்.
இனி என்ன மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறப் பழங்கள் மற்றும் காய்களை தவற விட மாடீர்கள் என்று நினைக்கிறேன்.
இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.