Tuesday, May 16, 2023
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாதோற்றாலும் முதலமைச்சராகும் புஷ்கர் சிங் தாமி : முடிவெக்க உத்தரகாண்ட் விரையும் மத்திய அமைச்சர்கள்

    தோற்றாலும் முதலமைச்சராகும் புஷ்கர் சிங் தாமி : முடிவெக்க உத்தரகாண்ட் விரையும் மத்திய அமைச்சர்கள்

    நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தனித்துப் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனாலும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளர் புஷ்கர் சிங் தாமி தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். எனவே, அடுத்த முதலமைச்சர் யார் என்பதை முடிவு செய்ய மத்திய நிதியமைச்சர்கள் டேராடூன் விரைந்துள்ளனர்.

    சமீபத்தில் பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களுக்கான சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும், பாஜக உத்தரபிரதேசம், உத்தரகாண்ட்,மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களிலும் ஆட்சியைப் பிடித்தன. உத்தரகாண்டைப் பொறுத்தவரை பாஜக,காங்கிரஸ், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் கட்சிகள்  தனித்தும், கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணியாகவும் போட்டியிட்டன. 

    70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகாண்டில் 47 தொகுதிகளில் பாஜகவும், 19 தொகுதிகளில்  காங்கிரசும், 2 தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியும், 2 தொகுதிகளில் சுயேட்சைகளும் வெற்றி பெற்றிருந்தன. அங்கு ஆளும் கட்சியாக இருந்து வரும் பாஜக அரசு 44.33 சதவீதம் வாக்குகளையும்,  காங்கிரஸ் 37.91 சதவீத வாக்குகளையும், பகுஜன் சமாஜ் 4.82 சதவீத வாக்குகளையும், இந்த முறை அதிகபட்சமாக நோட்டா 0.87 சதவீதம் வாக்குகளையும் கைப்பற்றின.

    Pushkar Singh Dhami

    பாஜக ஆட்சியைக் கைப்பற்றிய போதும் அதன் முதல்வர் வேட்பாளராக களமிறங்கிய புஷ்கர் சிங் தாமி அவரது வலுவான தொகுதியிலேயே காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வியைத் தழுவினார். ஆகையால், அடுத்த முதல்வர் யார் என்பதைத் தேர்ந்தெடுக்க மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் தர்மேந்திர பிரதான் விரைவில் உத்தரகாண்ட் செல்லவுள்ளனர்.

    தோற்றுப் போயிருந்தாலும் புஷ்கர் சிங் தாமியையே முதல்வராக்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது எனவும், ஆனால் சமீப காலங்களில் அவரது செயல்பாடு கட்சியின் தலைமைக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும், அதனால் முதல்வர் பதவிக்கு வேறு சிலரின் பெயர்களும் அடிபடுகிறது என்று கூறப்படுகிறது. 

    Pushkar Singh Dhami Meets PM Modi

    கடந்த ஆட்சியில் பாஜக அரசு திரிவேந்திர சிங் ராவத், தீரத் சிங் ராவத் மற்றும் புஷ்கர் சிங் தாமி என மூன்று முறை முதல்வர்களை மாற்றியது குறிப்பிடத்தக்கது. 2024ல்  வரப்போகும் நாடாளுமன்றத் தேர்தலைக் கருத்தில் கொண்டு பாஜக ஒரு வலுவான ஆளுமை கொண்ட ஆளுமையை முதல்வராகத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நாட்டுப்பற்று மற்றும் பிரதமர் மோடிக்கு நெருக்கமானவர் என்ற முறையில் மீண்டும் புஷ்கர் சிங் தாமியையே முதவராக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

    இதையும் படியுங்கள் : உத்தரகாண்டில் தோற்றுப்போன முதல்வர் வேட்பாளர் : யார் அடுத்த முதல்வர் ? 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....