Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஆப்பரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; நீலகிரியில் பன்றிகள் விற்க தடை

    ஆப்பரிக்கன் பன்றிக் காய்ச்சல் எதிரொலி; நீலகிரியில் பன்றிகள் விற்க தடை

    ஆப்பரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப் பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், நீலகிரியில் பன்றிகள் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    தமிழகத்தின் முதுமலை புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலத்தின் பந்திப்பூர் புலிகள் காப்பகம், கேரள மாநிலம் முத்தங்கா வனவிலங்கு சரணலாயம் ஆகிய 3 சரணாலயங்கள் ஒன்றினைந்த வனப்பகுதியாக நீலகிரி மாவட்டத்தின் ஊட்டி அருகே இருக்கும் முதுமலை வனப்பகுதி அமைந்துள்ளது. 

    இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில வாரங்களாகவே 30 க்கும் மேற்பட்ட காட்டுப் பன்றிகள் உயிரிழந்து கிடந்தன. இந்தக் காட்டுப்பன்றிகளை உடற்கூறாய்வு செய்த தமிழக அரசு அதனை சென்னை மற்றும் தில்லி ஆய்வகத்துக்கு அனுப்பி வைத்தது. 

    இந்நிலையில் இந்த ஆய்வு முடிவுகளில் காட்டுப்பன்றிகள் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் பாதிப்பால் இறந்தன என்பது உறுதி செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் அம்ரீத் செய்தியாளர் சந்திப்பில் பேசினார். அப்போது, ஆப்பரிக்கன் பன்றிக் காய்ச்சலால் காட்டுப்பன்றிகள் இறந்தது உறுதி செய்யப்பட்டதாகவும், இந்த நோய் மனிதர்களுக்கும் மற்ற வன விலங்குகளுக்கும் பரவ வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார். 

    மேலும் தமிழகம், கேரளம், கா்நாடக மாநில அரசுகளின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மருத்துவ அதிகாரிகளுடன் இன்று காணொலி காட்சி மூலம் கூட்டம் நடத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்த மாவட்ட ஆட்சியர் அம்ரீத், இந்த கூட்டத்துக்கு பின் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

    இதனிடையே, கூடலூா் வனத்துறை அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில், காட்டுப் பன்றிகள் இறப்பு சம்பவங்கள் குறித்து நிலைமை சரியாகும் வரை, நீலகிரியில் வளா்ப்பு பன்றிகளை விற்க தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....