Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம்

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் இன்று ஆருத்ரா தரிசனம் நடைபெறுகிறது.

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் பிரசித்திபெற்ற விழாக்களாக கொண்டாடப்படுகிறது. 

    இந்த ஆருத்ரா தரிசனம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மேலும் இந்த நட்சத்திரத்தில் தான் சிவன் களி உண்ண சென்றதாக புராணக் கதைகள் கூறுகின்றன. அந்த வகையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆருத்ரா தரிசன திருவிழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. 

    இதைத்தொடர்ந்து நேற்று காலை 5 மணி முதல் மூலவர் ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்பாளுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி காட்சி அளித்ததில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து, ‘சிவ சிவ’ முழக்கத்துடன் சாமியை தரிசனம் செய்தனர்.

    இந்நிலையில், இன்று அதிகாலை ஆயிரங்கால் மண்டப முகப்பில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமத் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகமும் புஷ்பாஞ்சலியும், ஸ்வர்ணபிஷேகமும் நடைபெற்றன. 

    இதைத்தொடர்ந்து இன்று பிற்பகல் பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்தப்பிறகு,  நடராஜமூர்த்தியும் ஸ்ரீசிவகாமசுந்தரியும் நடனமாடி, ஆருத்ரா தரிசனக் காட்சியளித்து சித்சபை பிரவேசம் செய்ய உள்ளனர். இதையடுத்து நாளை சனிக்கிழமை முத்துப்பல்லக்கு வீதியுலா நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைய உள்ளது. 

    ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த சோதனை; ரூ.70,000 செலவானது – பிரபல இயக்குநர் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....