Thursday, March 21, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த சோதனை; ரூ.70,000 செலவானது - பிரபல இயக்குநர் பதிவு

    ஷவர்மா சாப்பிட்டதால் நேர்ந்த சோதனை; ரூ.70,000 செலவானது – பிரபல இயக்குநர் பதிவு

    ஷவர்மா சாப்பிட்டப் பின் நேர்ந்த உடல்நலக்குறைவால் கிட்டத்தட்ட ரூ.70,000 செலவு செய்து என் பெற்றோர் என்னைக் காப்பாற்றினார்கள் என பிரேமம் திரைப்படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் தெரிவித்துள்ளார். 

    நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம், பிரேமம். மூன்று பருவங்களில் நிகழும் காதல் கதையை மிகவும் அழகாக பிரேமம் திரைப்படம் காட்சிப்படுத்தியது. 

    மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும், இந்திய அளவில் பிரேமம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பிரேமம் ஓடியது. 

    மாபெரும் வெற்றிப் பெற்ற பிரேமம் திரைப்படத்தை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். பிரேமம் திரைப்படத்திற்கு முன்பாக, இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. 

    இப்படியாக நேரம், பிரேமம் என இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் இயக்கத்தில் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ‘கோல்டு’ திரைப்படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியானது. இத்திரைப்படத்தில், பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடித்திருந்தனர். 

    இதைத்தொடர்ந்து. கோல்டு திரைப்படமானது கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டு அதன்படியே ரிலீஸானது. ஆனால், இத்திரைப்படமானது கலவையான விமர்சனங்களைப் பெற்றது. 

    இந்நிலையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்ரன் தனது சமூகவலைதளப் பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதன்படி,  ’15 ஆண்டுகளுக்கு முன் என் நண்பர் ஷராஃப் உதீன் ஷவர்மா வாங்கிக்கொடுத்தார். மயோனைஸ் உடன் அதை உண்டேன். அடுத்த நாள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். கிட்டத்தட்ட ரூ.70,000 செலவு செய்து என் பெற்றோர் என்னைக் காப்பாற்றினார்கள். இதற்காக நண்பர் மீது கோவப்பட்டேன். ஆனால், கெட்டுப்போன அசுத்தமான உணவுதான் என் நிலைமைக்குக் காரணம். இங்கே உண்மையான குற்றவாளி யார்? கண்களைத் திறந்து உண்மையைப் பாருங்கள். வாழ்க்கை மிகவும் விலை உயர்ந்தது.’ தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இயக்குநரின் அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவு தற்போது சமூகவலைதளத்தில் வைரலாகியுள்ளது. கேரளாவில், சமீபத்தில் மந்தி பிரியாணி சாப்பிட்டு செவிலியர் ஒருவர் பலியானது குறிப்பிடத்தக்கது. 

    இந்தியா vs இலங்கை; சொதப்பிய டாப் ஆர்டர்..சமனில் முடிந்த போட்டி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....