Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்பெட்ரோலுக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர் மரணம்; பதற வைக்கும் சம்பவம்!

    பெட்ரோலுக்காக காத்திருந்த ஆட்டோ டிரைவர் மரணம்; பதற வைக்கும் சம்பவம்!

    இலங்கையில் பெட்ரோல் வாங்க இரவு முழுதும் காத்திருந்த ஆட்டோ டிரைவர் மாரடைப்பால் மரணம் அடைந்து உள்ளார். இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை அடுத்து அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து உள்ளது.

    மேலும் அன்னியச் செலாவணி பற்றாக்குறை, எரிபொருள் தட்டுப்பாடு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு உள்ளிட்ட பல நெருக்கடிகளில் சிக்கியுள்ளது. இங்கு, வாகன ஓட்டுனர்கள் நீண்ட வரிசையில் நாள் முழுதும் காத்திருந்து, பெட்ரோல், டீசல் வாங்கும் நிலை உள்ளது.

    இந்நிலையில், தலைநகர் கொழும்பு அருகே பனதுரா பகுதியில் உள்ள ஒரு பெட்ரோல் நிலையத்திற்கு, நேற்று முன்தினம் இரவு ஆட்டோ டிரைவர் ஒருவர் சென்றுள்ளார். நீண்ட வரிசையில் நேற்று காலை வரை காத்திருந்த அவர், திடீரென ஏற்பட்ட நெஞ்சு வலி காரணமாக, ஆட்டோவிலேயே மரணம் அடைந்தார்.

    இலங்கையில், ஏற்கனவே பெட்ரோல், டீசல் வாங்க காத்திருந்த சிலர், கடும் வெயிலுக்கு பலியாகியுள்ளனர். இதற்கிடையே புகாடா நகரில், நேற்று முன்தினம் இரவு சமையல் ‘காஸ்’ சிலிண்டர் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவரும் மரணம் அடைந்தார்.

    இந்நிலையில் இலங்கையின் பல பகுதிகளில் பெட்ரோல், டீசலுக்கு பல மணி நேரம் காத்திருக்கும் மக்கள் பொறுமையிழந்து சாலை மறியலில் ஈடுபடுகின்றனர். இந்தியாவிலிருந்து டீசல் ஏற்றிச் சென்ற கப்பல், நேற்று இலங்கையை அடைந்தது. இந்த டீசல் அடுத்த மூன்று நாட்களில் விநியோகிக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

    மேலும், இலங்கை எரிசக்தித்துறை அமைச்சர் கஞ்சன விஜேசேகர பெட்ரோல், டீசல் விநியோகம் தொடர்பாக சில கருத்துகளை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் அவர் கூறியுள்ளதாவது:

    இலங்கை அரசு தற்போது ஒருவாரத்துக்கான எரிபொருட்களை மட்டுமே இறக்குமதி செய்து வருகிறது. 4 மணிநேரத்துக்கு மின்சாரம் வழங்க பெட்ரோல், டீசல் உள்ளிட்டவைகளுக்கு ஒரு மாதத்துக்கு 100 மில்லியன் டாலர் செலவிடப்படுகிறது. இப்போது ஒரு மாதத்துக்கான எரிபொருட்கள் செலவும் 750 மில்லியன் டாலராகிவிட்டது. இதனால் 24 மணிநேரம் மின்சாரம் கிடைக்கும் வரையில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விற்பனைக்கு ரேஷன் முறை அவசியமாகிறது.

    இலங்கையில் 24 மணிநேரமும் மின்சாரத்தை வழங்கவும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் விநியோகத்தை சீராக சாத்தியமாக்கும் வரையிலும் ஜூலை மாதம் முதல் புதிய நடைமுறையை அமல்படுத்தும் யோசனை உள்ளது. எரிபொருள் தேவை உள்ளவர்கள் முன்பதிவு செய்து கொண்டால் வாரம் ஒரு முறை ரேஷன் முறையில் அவர்களுக்கு பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், எரிவாயு விநியோகிக்கப்படும். இந்த கோட்டா முறை ஜூலை முதல் அமலுக்கு வருகிறது.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கார்த்திக்-பாண்டியா அபாரம், தென்னாப்பிரிக்கா அணியினை வீழ்த்தி வெற்றி!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....