Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உலகின் அதிக வெப்பமான பகுதிகள் எங்கெங்கே! இவ்வளவு வெப்பமா?

    உலகின் அதிக வெப்பமான பகுதிகள் எங்கெங்கே! இவ்வளவு வெப்பமா?

    கடந்த மே மாதத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் வெப்பநிலையானது வரலாற்று உச்சத்தினைத் தொட்டது. அதீத வெப்பத்தின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பல பகுதிகளில் சிரமத்திற்குள்ளானது. ராஜஸ்தான், பஞ்சாப், ஹரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் 45 டிகிரிக்கும் அதிகமான வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    இந்த வருடத்தில் அதிகபட்சமாக ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிரம்மபுரி பகுதியில் 46.2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியது. இந்த அளவு வெப்பநிலையே உயிரினங்களை வாட்டி வதைக்கும் போது, உலகின் பிற பகுதிகளில் நிலவும் அதிக பட்ச வெப்பநிலை எந்த அளவிற்கு இருந்திருக்கும் என்ற கேள்வி அனைவரது மனத்திலும் எழவே செய்கிறது.

    இப்படி, உலக வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட அதிக அளவு வெப்ப நிலையினைப் பற்றியும், எந்த நாட்டில் பதிவானது என்பதனைப் பற்றியும் இந்த பதிவில் பார்க்கலாம்.

    1. கெபிலி, துனிசியா: 55 டிகிரி செல்சியஸ்.

    ஆப்பிரிக்க கண்டத்தில் இருக்கும் இந்த பகுதியானது மிகவும் பழமையான நிலப்பரப்பாகும். 1920-33 வருட காலத்தில் தொடர்ச்சியாக 50 முதல் 55 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது இங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    எனினும், 2000ம் ஆண்டிற்குப் பிறகு இங்கு படிப்படியாக வெப்பநிலையானது குறையத்தொடங்கி, அதிகபட்சமாக 48.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையானது பதிவாகியுள்ளது.

    இந்த அளவிற்கு அதிக வெப்பநிலை பதிவாகும் இடமாக இருந்தாலும், செல்வவளம் மிக்கதாக விளங்கும் துனிசியாவானது இரண்டு லட்சம் வருடங்களுக்கு மேலாக வாழிடப்பகுதியாக விளங்கி வருகிறது.

    1. டிராட் ஸ்வி, இஸ்ரேல்: 54 டிகிரி செல்சிஸ்.

    ஆசிய கண்டத்தில் அதிக ஈரப்பதம் மிக்க பகுதியாக விளங்கும் இங்கு 1942ம் ஆண்டு 54 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவானது. அந்த காலத்தில் ஆசியக்கண்டத்தில் நிலவிய அதிகபட்ச வெப்பநிலை இதுவேயாகும். 

    கோடைகாலம் இல்லாத நாட்களிலும் இங்கு சராசரியாக 37 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகிறது.

    கடல்மட்டத்திலிருந்து 722 அடி கீழே இருக்கும் இந்த பகுதியானது, இஸ்ரேலின் முக்கிய சமயத்தலமாகப் பார்க்கப்படுகிறது.

    1. சாவுப் பள்ளத்தாக்கு, அமெரிக்கா: 56 டிகிரி செல்சியஸ்.

    அமெரிக்க நாட்டின் மிகவும் வறட்சியான பகுதியான இங்கு, சராசரி வெப்பநிலை 47 டிகிரி செல்சியஸ் அளவு பதிவாகிறது. இந்த அளவு அதீத வெப்பநிலை நிலவுவதற்குக் காரணம் கடல் மட்டத்திலிருந்து மிகவும் தாழ்வான பகுதியில் அமைந்திருப்பதேயாகும்.

    மலைகளால் சூழப்பட்டுள்ள இந்த சாவுப் பள்ளத்தாக்கில் அதிகபட்சமாக 56.7 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகியுள்ளது.

    1. அல்-அசிசியா, லிபியா: 57.8 டிகிரி செல்சியஸ்.

    லிபியாவின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் இந்த சிறிய நகரத்தில் 1922ம் ஆண்டு அதிக அளவாக 57.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளது.

    கோடைகாலங்களில் இங்கு 48 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகிறது.

    1. படிமக் குகை, மெக்ஸிகோ: 58 டிகிரி செல்சியஸ்.

    மெக்ஸிகோவில் அமைந்துள்ள இந்த படிமக் குகையானது 900 அடி ஆழத்தில் அமைந்துள்ளது. சுண்ணாம்பு படிமங்கள் அதிகம் அமைந்துள்ள இந்த குகையினுள் அதிகபட்ச அளவாக 58 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரைப் பதிவாகியுள்ளது.

    இந்த அதிகபட்ச வெப்பநிலை நிலவுவதன் காரணமாக இந்த குகையானது பெரிதும் பரிசோதிக்கப்படாமல் உள்ளது.

    1. ஃப்ளேமிங் மலைகள், சீனா: 66.8 டிகிரி செல்சியஸ்.

    சிகப்பு மணற்பாறைகளால் ஆன இந்த மலைத்தொடர்ச்சியானது சீனாவின் க்சின்ஜியான் பகுதியில் அமைந்துள்ளது. தக்லமக்கான் பாலைவனமானது இந்த மலைத்தொடருக்கு அருகில் அமைந்துள்ளது.

    2008ம் ஆண்டு இந்த பகுதியில் 66.8 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலை பதிவாகியது. அந்த வருடத்தில் பூமியில் பதிவாகிய அதிக அளவு வெப்பநிலை இதுவேயாகும்.

    1. குயின்ஸ்லாந்து, ஆஸ்திரேலியா: 69.3 டிகிரி செல்சியஸ்.

    குயின்ஸ்லாந்து மாகாணமானது ஆஸ்திரேலியாவின் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாகும். உலகப் பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்ட மழைக்காடுகள், ஆரவாரமான அலைகள் ஆர்ப்பரிக்கும் கடல் பகுதிகள், ஆறுகள், பவளப்பாறைகள் என, கண்களுக்கு விருந்தாகும் பல இடங்கள் இங்கு உள்ளன.

    2003ம் ஆண்டு குயின்ஸ்லாந்தில் 69.3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது.

    1. டஷ்த்-இ-லுட், ஈரான்: 70.7 டிகிரி செல்சியஸ்.

    பல ஆண்டுகளாக உலகின் மிக வெப்பமான பகுதிகளில் ஒன்றாக இடம்பெறும் இந்த டஷ்த்-இ-லுட் ஒரு பாலைவனமாகும். 5,400 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த பகுதியில் தாவரங்களோ, விலங்கு நடமாட்டமோ இருப்பதில்லை.

    இங்கு அதிகபட்சமாக 2005ம் ஆண்டு 70.7 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலைப் பதிவாகியது. இந்த பாலைவனத்தின் பெரும்பாலான பகுதிகளில் அதீத வெப்பநிலை நிலவுவதால் இங்கு எந்த வகையான விலங்குகளும் வாழ முடிவதில்லை.

    1. பந்தர்-இ-மஹ்ஷார், ஈரான்: 74 டிகிரி செல்சியஸ்.

    ஈரானில் இருக்கும் இந்த நகரத்தில் ஜூலை மாதம் 2015ம் ஆண்டு 74 டிகிரி செல்சியஸ் அளவு வெப்பநிலைப் பதிவாகியது.

    உஷாரா இருங்க சென்னை வாசிகளே: கொரோனா பரவல் வேகம் அதிகரிப்பு! இத்தனை வேகமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....