Tuesday, March 19, 2024
மேலும்
    Homeவாழ்வியல்மகளிர்தனியாகச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு, கவனமாக பயணியுங்கள் !

    தனியாகச் செல்லும் பெண்களின் கவனத்திற்கு, கவனமாக பயணியுங்கள் !

    வெளி ஊர்களுக்கும் வெளி நாடுகளுக்கும் ஊர் சுற்றுவது, சுற்றுலா செல்வது என தனியாக பெண்கள் வெளியூர் செல்லும்போது தெரியாத இடம் என்பதால் அங்கு உணவு, இருப்பிடம் இவை எல்லாமே புதிதாக இருக்கும். அப்படி தனியாகச் செல்லும் பெண்களின்  கவனத்திற்கு,

    • நீங்கள் பயணம் செல்ல வேண்டிய இடத்தைப் பற்றி முன்னரே தெரிந்துக் கொள்வது மற்றும் தீர ஆய்வு செய்த பின்னர் பயணம் செல்வது நல்லது. ஆனால் பயணிக்கப் போகும் இடத்தைப் பற்றி அறியாமல் போவது தான் சிறந்த அனுபவங்களைத் தரும். இருந்தாலும் இப்படிச் செய்வது முன் அறிவிப்பைத் தரும்.
    • நீங்கள் செய்யும் பயணத்தின் போது உங்கள் பொருள்களை நீங்களே வைத்திருப்பது நல்லது. பிறரிடம் கொடுத்து வைத்திருப்பது  என்பதெல்லாம் உங்கள் பொருளின் பாதுகாப்பை உணர்த்தாது. விலையுர்ந்த பொருட்களை எடுத்து செல்லாமல் இருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக  அதிக நகைகள், பணங்கள், சான்றிதழ்கள், விலையுர்ந்த ஸ்மார்ட் போன், லேப்டாப். alone travel
    • நீங்கள் செல்லும் இடத்திற்கு ஏற்றவாறு உங்களை மாற்றிக் கொள்வது நல்லது. காரணம் மக்களோடு மக்களாக இருப்பதால் நாம் வெளியே இருந்து வந்தவர் என்பது தெரிய வாய்ப்புகள் குறைவு.
    • உங்களின் பாதுகாப்பிற்காக பணம் செலவு செய்வது என்றும் நல்லது தான். காரணம் நீங்கள் பாதுகாப்புடன் உணரப் போகிறீர்கள். நீங்கள் இரவு நேரத்தில்  பயணம் செய்ய வேண்டியிருந்தால் நம்பகமான பெரிய ஹோட்டலில் தங்குவது, கார் வசதி போன்றவை. alone travel at night
    • டெபிட் கார்டு கிரெடிட் கார்டு போன்ற காப்பிகளை மொபைல் கிளவுட் ஸ்டோரேஜ்  போன்றவற்றில் முன்னரே சேமித்து வையுங்கள். சிறிது பணத்தை எப்போதும் உங்கள் உடைகளில் எங்கேயாவது மறைத்து வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் கொண்டு செல்லும் பொருள் தொலைந்தோ அல்லது திருடோ போய்விட்டால் இவை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
    • வெளிநாடுகளுக்கு செல்வதால் அங்கு நிலைமை எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது ஆகையால் பயணக் காப்பீடு எடுத்துவிட்டு பிறகு பயணியுங்கள். உணவு கிடைக்காமல் போனாலும் அல்லது மருத்துவ வசதி, அவசரத் தேவைகளுக்கு இந்தக் காப்பீட்டு திட்டம் உதவும்.
    • உங்களுக்கு மிக தேவையான பொருள்களை மட்டும்  எடுத்துச் செல்லுங்கள்.நீங்கள் செல்லும் இடத்தில் யாரையும் எளிதில் நம்ப வேண்டாம். அவர்கள் உங்களைக் கவர நினைக்கலாம் அல்லது உங்களிடம் தவறாக நடந்து கொள்ள முயற்சிக்கலாம். 
    • நீங்கள் குடிக்கும் பானங்களையும் உணவுப் பொருள்களையும் சோதித்த பிறகு உண்ண எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுடன் இருக்கும் அனைவரும் உண்ட பிறகு நீங்கள் உண்ணுவது பாதுகாப்பு. alone travel
    • நீங்கள் செல்லும் இடத்தின் பெயர், தங்கும் விடுதியின் பெயர், முகவரி போன்றவற்றை அவ்வப்போது உங்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு தெரிவித்துக் கொண்டே இருத்தல் அவசியம். அது உங்களை மகிழ்விக்கவும் நீங்கள் இருக்கும் இடத்தில் என்ன செய்கிறீர்கள் எங்கெங்கு சென்றீர்கள் என்பதை உங்கள் நலனை எதிர்ப்பார்த்து இருப்பவர்களுக்கும் தெரிய வைக்கும்.

    மிக கவனமாக பயணியுங்கள் பெண்களே…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....