Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பெண்களுக்கான விடுதலையை பெண்களே போராடிப் பெறவேண்டும் என கூறியுள்ள மே 17 இயக்கம்!

    பெண்களுக்கான விடுதலையை பெண்களே போராடிப் பெறவேண்டும் என கூறியுள்ள மே 17 இயக்கம்!

    மனித சமூகத்தில் ஆண்களுக்கு சமமான எண்ணிக்கையில் உள்ள பெண்கள், ஆண்களுக்கு சமமான உரிமை பெற்று வாழ முடியவில்லை என்ற எதார்த்த உண்மையை பொதுவுடமை சித்தாந்த நாடுகள் பேச தொடங்கியதற்கு பின்பு பெண்களுக்கான உரிமை பற்றிய பேச்சும், எழுச்சியும் தொடங்கியது என்று தனது அறிக்கையில் குறிப்பிட்டது, மே 17 இயக்கம்.

    Vladimir Lenin

    இதோடு, 1919-ம் ஆண்டு புரட்சியாளர் லெனின் அவர்கள் சர்வதேச உழைக்கும் பெண்கள் தின நிகழ்ச்சியில் பேசும்பொழுது “முதலாளித்துவக் குடியரசில் (அதாவது நிலம், தொழிற்சாலைகள், பங்குத் தொகைகள் முதலியவற்றில் தனிச் சொத்துரிமை இருக்கின்ற நாட்டில்), அது எவ்வளவு – அதிகமான ஜனநாயகம் உள்ள நாடாக இருந்த போதிலும், உலகத்தின் எந்தப் பகுதியிலும், அதிகமான முன்னேற்றமடைந்த நாடுகளில் ஏதாவது ஒரு நாட்டில் கூட,பெண்களுக்கு ஆண்களோடு முழு அளவுக்குச் சமமான உரிமைகள் எந்தக் காலத்திலும் இருக்கவில்லை.” என்று கூறியதை நினைவுப்படுத்தியது, மே 17 இயக்கம்.

    1917-ஆம் ஆண்டு ரஷ்ய புரட்சிக்கு பின்பு ரஷ்யாவில் தான் பெண்களுக்கு எதிராக இயற்றப்பட்டு வந்திருந்த அடிப்படைவாத சட்டங்கள் அடியோடு துடைத்து எறியப்பட்டன என்றும்  “சோஷியலிசத்துக்கு மாறுகின்ற போது எந்தத் தொழிலாளர் அரசுக்கும் இரட்டைக் கடமை இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. அந்தக் கடமையின் முதற் பகுதி ஒப்புநோக்கில் சாதாரணமானதாகவும் சுலபமானதாகவும் இருக்கிறது. ஆண்களோடு ஒப்பிடும் பொழுது பெண்களைத் தாழ்வானவர்களாக வைத்திருந்த பழைய சட்டங்களைப் பற்றியதே அது.” என்ற புரட்சியாளர் லெனின் அவர்கள் கூறியதும் அந்த அறிக்கையில் இடம் பெற்றிருந்தது. 

    strong women

    பெண்களுக்கான வாக்குரிமை மற்றும் சொத்துரிமை தொடர்பான சட்டங்கள் இயற்றப்பட்ட பின்னரே முதலாளித்துவ நாடுகளும் இதுபோன்ற சட்டங்களை இயற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டன என்ற வரலாறையும் இந்தியாவைப் பொறுத்தவரையில் ஜோதிராவ் புலே சாவித்திரி புலே மற்றும் அண்ணல் அம்பேத்கர் முதலியோர் வட இந்தியாவிலும், தந்தை பெரியார் முதலான திராவிட இயக்கத் தலைவர்கள் தென்னிந்தியாவிலும் பெண்ணுரிமை பற்றியும், பெண் விடுதலை பற்றியும் பெரும் முயற்சிகளை எடுத்தனர் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

    periyar

    ‘புரட்சியாளர் லெனின், தந்தை பெரியார் கூறியதைப் போல பெண்களுக்கான விடுதலையை பெண்களே போராடிப் பெறவேண்டும் என்பதே இதற்கான தீர்வாக அமையும். சர்வதேச பெண்கள் தினமான இன்று ‘பெண் விடுதலையே மண் விடுதலை’ எனும் மேதகு பிரபாகரனின் வரிகளை நினைவுபடுத்தி பெண்விடுதலையை முன்னெடுக்க அணியாவோம்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....