Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

    கடலூர் மாவட்டத்திற்கு ஜனவரி 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

    கடலூர் மாவட்டத்திற்கு வருகிற 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

    சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் திருமஞ்சன தரிசன விழாவும், மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவும் மிகவும் பிரசித்திபெற்ற விழாக்களாக கொண்டாடப்படுகிறது. 

    இந்த ஆருத்ரா தரிசனம் என்பது திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும். மேலும் இந்த நட்சத்திரத்தில் தான் சிவன் களி உண்ண சென்றதாக புராணக் கதைகள் கூறுகின்றன. 

    அந்த வகையில், சிதம்பரம் நடராஜர் கோயிலில் கடந்த டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி ஆருத்ரா தரிசன திருவிழா வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து, ஒவ்வொரு நாளும் பஞ்சக மூர்த்திகள் வீதி உலா வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில், முக்கிய நிகழ்வான தேரோட்டம் நாளை நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து, நாளை மறுநாள் 2 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் நடைபெற இருக்கிறது. 

    இதன் காரணமாக, சிதம்பரம் நடராஜர் கோயிலில் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும் என்பதால் கடலூர் மாவட்டத்திற்கு வருகிற 6 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த நபர்; விமானத்தில் நேர்ந்த பிரச்சினை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....