Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த நபர்; விமானத்தில் நேர்ந்த பிரச்சனை

    சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த நபர்; விமானத்தில் நேர்ந்த பிரச்சனை

    ஏர் இந்தியா விமானம் ஒன்றில் வணிக வகுப்பில் பயணித்த பெண் பயணி மீது, குடிபோதையில் நபர் ஒருவர் சிறுநீர் கழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

    கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் தேதி ஏர் இந்தியா விமானம் ஒன்றில் வணிக வகுப்பில் பயணம் செய்த பெண் பயணியின் மீது குடி போதையில் ஒருவர் சிறுநீர் கழித்தார். 

    குறிப்பாக விமானத்தில் கேபின் விளக்குகள் அணைக்கப்பட்டபோது அந்த நபர் சிறுநீர் கழித்ததாகவும் அந்தப் பெண் பயணியின் உடை, பை மற்றும் காலணி ஆகியவை நனைந்து இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

    இந்தச் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் கூறுகையில், அவருக்கு மாற்று உடை வழங்கப்பட்டதாகவும் இருக்கைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் கூறினார். மேலும், அந்த அநாகரீக செயலை செய்த அந்த நபர், விமானம் தரை இறங்கிய பின்னும், சுதந்திரமாக விமான குழுவினர் நடமாட அனுமதித்தாகவும் அந்தப் பெண் புகார் தெரிவித்தார். 

    இந்தச் சம்பவம் அமெரிக்காவின் ஜேஎப்கே விமான நிலையத்தில் இருந்து தில்லிக்கு வந்த ஏர் இந்தியா விமானத்தில் நடந்ததாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த விமான நிறுவனம் ஒரு குழு அமைக்கப்பட்ட நிலையில், அந்தப் பயணி இனி எந்த விமானத்திலும் பயணிக்க முடியாத தடை பட்டியலில் சேர்க்க அந்தக் குழு பரிந்துரை செய்துள்ளது. 

    இந்த விவகாரம் தற்போது அரசு ஆய்வு குழுவிடம் இருப்பதாகவும், இந்தக் குழுவின் முடிவுக்காக காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

    இதனிடையே, இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வமாக விமான நிறுவனம் பகிர்ந்ததைத் தொடர்ந்து, ஏர் இந்தியா என்ற ஹாஷ்டேக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் கொடுத்த 2 திமுக நிர்வாகிகள் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....