Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை பிரதமர் அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிப்பு

    இலங்கை பிரதமர் அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிப்பு

    இலங்கை பிரதமர் மாளிகையிலும், அலுவலகத்திலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், இலங்கை மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

    கடந்த சனிக்கிழமை, அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட போராட்டக்காரர்கள், அதிபர் மாளிகையை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு தப்பியோடினார்.

    இலங்கையில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், நேற்று ரணில் விக்ரமசிங்கே அவசரநிலையை அமல்படுத்தினார். இருப்பினும், இலங்கையில் மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இந்நிலையில், நேற்று தொலைக்காட்சி மூலம் பேசிய ரணில் விக்ரமசிங்கே, ஜனநாயகத்துக்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் சொத்துகளை அழிப்பதை அனுமதிக்க முடியாது. அதிபர் மாளிகையை திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

    மேலும், நமது அரசியலமைப்பை கிழித்து எறிந்துவிட முடியாது. தீவிரவாதிகளுக்கு  சில முக்கிய அரசியல் தலைவர்கள் ஆதரவளிப்பதாகத் தெரிகிறது. ராணுவம் மற்றும் காவல்துறை சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று ரணில் விக்ரமசிங்கே தெரிவித்தார். 

    இலங்கை பிரதமர் மாளிகை முன்பு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இச்சமயத்தில், அந்நாட்டு பிரதமர் மாளிகையிலும், அலுவலகத்திலும் ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

    இலங்கை மக்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம்- ஐ.நா. பொதுச்செயலாளர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....