Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பே இலங்கையின் நிலைக்கு காரணம் - உக்ரைன் அதிபர்

    உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பே இலங்கையின் நிலைக்கு காரணம் – உக்ரைன் அதிபர்

    இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையும் ஒரு காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

    இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. அங்குள்ள மக்களின் அத்தியாவசிய தேவைகளுக்கே பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

    இந்நிலையில், இலங்கையின் இந்நிலைக்கு உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பும் ஒரு காரணம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். 

    சியோலில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.

    உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறியதாவது :

    உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பினால் உணவுப் பொருள்கள் ஏற்றுமதி தடைப்பட்டதால், இலங்கையில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

    இந்த படையெடுப்பில் ரஷ்யா பயன்படுத்திய தந்திரத்தில் முக்கியமானது பொருளாதார நெருக்கடியை உருவாக்குவது. விநியோகச் சங்கிலியில் ஏற்பட்ட இடையூறு காரணமாக உணவு மற்றும் எரிபொருள் பற்றாக்குறை அதிகளவில் ஏற்பட்டுள்ளது.

    உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஒரு சமூக பிளவுக்கு வழிவகுத்துள்ளது. இந்நிலை எப்படி முடிவடையும் என்பது இப்போது யாருக்கும் தெரியாது. 

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    இலங்கை பிரதமர் அலுவலகத்தில் ராணுவத்தினர் குவிப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....