Friday, May 3, 2024
மேலும்
    Homeதொழில்நுட்பம்கூகுள் Chrome பயன்படுத்துபவரா நீங்கள் ..உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்

    கூகுள் Chrome பயன்படுத்துபவரா நீங்கள் ..உங்களுக்கான புதிய வசதி அறிமுகம்

    ஹேக்கர்களிடமிருந்து தப்பிக்க விண்டோஸ், மேக், லினக்ஸ் பதிப்புகளில் உள்ள குரோம் இணையதளத்தை பயன்படுத்தும் பயனாளர்கள் தங்களது பிரவுசரை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்றைய இணைய உலகில் பல்வேறு பயன்பாடுகளின் ஆதிக்கம் மக்களிடையே அதிகரித்து விட்டது. எது வேண்டுமானாலும் என்ன செய்து பார்க்க வேண்டும் என்றாலும் இல்லை ஏதோ ஒன்று தெரிந்து கொள்ள வேண்டும் என்றாலும் இணையத்தையே அனைவரும் நாடுகின்றனர்.

    இப்படி நல்ல விஷயங்களும் இருந்தாலும் இந்த இணைய உலகத்தில் பல்வேறு மோசடிகள் அரங்கேரித்தான் வருகிறது. ஹேக்கிங் போன்ற இணைய மோசடிகளால் மக்கள் அவதிப்பட்டு தான் வருகின்றனர்.

    இந்த இணைய மோசடிகள் தொடர்பாக, பல புகார்கள் பதிவாகியுள்ளதாகவும் ரிமோட் அட்டாக்கர்களை (Remote Attackers) கணினியில் ஆர்பிட்டரி கோடை இயக்குவதற்கு அனுமதிக்கும் என சி.ஆர்.இ.டி ஐ.என் (CRET IN) தெரிவித்துள்ளது.

    மேலும், 81.0.4044.138 என்ற வெர்ஷனுக்கு முந்தைய அனைத்து கூகுள் குரோம் வெர்ஷன்களும் பாதிக்கப்படுகிறது. இதன் காரணமாக கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களது கூகுள் குரோமை புதுப்பிக்க வேண்டுமென கூறப்படுகிறது.

    இந்த நிலையில் தான், விண்டோஸ் மேக் மற்றும் லினுக்கஸ் பதிப்புகளில் உள்ள கூகுள் குரோம் பயனாளர்கள் தங்களது பிரவுசர்களை புதிய அப்டேட் மேக் மற்றும் லினக்ஸ்க்கு 104.0.5112.101 மற்றும் விண்டோஸுக்கு 104.0.5112.102/101 என்ற வர்ஷனுக்கு புதுப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே, கூகுள் குரோமை புதுப்பித்து இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. புதுப்பிக்க தவறினால், தேவையற்ற ஹேக்கர் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இப்போது, கூகுள் குரோமில் 11 பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதால், மீண்டும் ஒருமுறை புதுப்பிக்க வேண்டும் என கூகுள் குரோம் தங்களது பயனாளர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

    நீங்கள் உங்கள் கூகுள் குரோமை அப்டேட் செய்யவில்லை என்றால், கீழே உள்ள வழிமுறைகளை பின்பற்றலாம். கூகுள் குரோமை எப்படி அப்டேட் செய்வது? முதலில் பயனாளர்கள் தங்களது கூகுள் குரோம் பிரவுசருக்கு செல்ல வேண்டும்.

    பின்னர், வலது புறத்தில் உள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்த பின்பு ஹெல்ப் (Help) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். பிறகு, அபௌட் கூகுள் குரோம் (About Google Chrome) சென்று நியூ அப்டேட் சர்ச் (New Update Search) என்பதை கிளிக் செய்தால் புதுப்பித்தல் முடிந்து, உங்கள் திரைக்கு ரீலான்ச் (Relaunch) என்ற ஆப்ஷன் தெரியும்.

    இதைத்தொடர்ந்து, ரீலான்ச் (Relaunch) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, பிறகு இன்ஸ்டால் செய்தால், புதிய அப்டேட் வெர்ஷன் இன்ஸ்டால் ஆகிவிடும். அவ்வளவு தான்! இனி எப்போதும் போல நீங்கள் கூகுள் குரோமை பயன்படுத்தலாம்.

    இதையும் படிங்க: அமித் ஷா உயிருக்கு அச்சுறுத்தல் ? மாறுவேடத்தில் ‘ஆபீஸர்’ போல் வந்த நபர் கைது

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....