Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்அதிமுகவில் அடுத்த சலசலப்பு! சசிகலாவை சந்தித்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

    அதிமுகவில் அடுத்த சலசலப்பு! சசிகலாவை சந்தித்தார் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்தியலிங்கம்

    ஒற்றைத்தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவரது ஆதரவாளரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான வைத்திலிங்கம், இன்று சசிகலாவை சந்தித்து இனிப்பு எடுத்து கொண்டாடிய நிகழ்வு அக்கட்சி வட்டாரத்தினரிடையே பெரும் பரபரப்பையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

    அ.தி.மு.க-வில் ஒற்றைத் தலைமை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்காலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    இதனை எதிர்த்து ஓ.பி.எஸ் நீதிமன்றத்துக்குச் சென்று தோல்வியை மட்டுமே சந்தித்தார். அத்துடன் சசிகலா, தினகரன் உள்ளிட்டோர் இணைய வேண்டும் என வெளிப்படையாகவும் பேசி வந்தார். ஓ.பி.எஸ் அவர்களின் இந்த கருத்துக்களை அமமுக பொதுச்செயலாளர் தினகரனும் வரவேற்று பேசியிருந்தார். ஏற்கனவே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவும் அதிமுகவில் இருந்து யார் வந்தாலும் சந்திக்க தயாராக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில், மக்களை சந்தித்து பேசுவதற்காக கடந்த 7-ம் தேதி அன்று தனது புரட்சிப் பயணத்தை தொடங்கிய சசிகலா நேராக தனது சொந்த மாவட்டமான தஞ்சாவூருக்கு சென்றார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள முடிவு செய்த சசிகலா அதன்படி நேற்று திருத்துறைபூண்டியில் நடைபெற்ற சாய் பாபா கோவில் குடமுழுக்கு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    இதனை தொடர்ந்து இன்று மன்னார்குடியில் இருந்து, ஒரத்தநாடு நோக்கி சசிகலா காரில் வர, அதே வழியாக திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான வைத்திலிங்கமும் வந்து கொண்டிருந்துள்ளார்.

    அப்போது ஒரு மந்தையில் இருந்த இரண்டு ஆடுகள் வெவ்வேறு பாதையில் சென்றுவிட்டன. பிறகு இரண்டும் சந்தித்து கொண்ட போது பேச முடியவில்லையே என்ற வாக்கியத்திற்கு ஏற்ப சசிகலா, வைத்திலிங்கம் இருவரும் ஒரத்தநாடு அருகே காவாரப்பட்டு கிராமத்தின் அருகில் வரும் போது எதிரெதிரே சந்தித்துக்கொள்ள நேர்ந்துள்ளது.

    திடீரென இரண்டு கார்களும் காவாரப்பட்டு அருகே சாலை ஓரத்தில் நிறுத்தப்பட்டது. அப்போது வைத்திலிங்கம் காரில் இருந்து இறங்கி செல்ல, அதே நேரத்தில் சசிகலாவும் காரில் இருந்து இறங்கி வந்து, ஒருவருக்கொருவர் பரஸ்பர நலம் விசாரித்துக் கொண்டுள்ளனர்.

    அந்த சந்திப்பில் சசிகலா, உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு எப்படி இருக்கீங்க என்று வைத்திலிங்கம் அவர்களிடம் கேட்க ,அவரும் நல்லாயிருக்கேன்மா என பதிலளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அருகிலிருந்தவர்கள், சசிகலா அவர்களிடம் இன்னைக்கு வைத்திலிங்கத்திற்கு 72-வது பிறந்தநாள் எனக் கூறவும் , அப்படியா..! என உற்சாகமடைந்த சசிகலா தனது காரிலிருந்து பைஃவ் ஸ்டார் சாக்லேட்டுகளை எடுத்து வரச்சொல்லி, அவருக்கு கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    டெல்டா மாவட்டமான தஞ்சையில் செல்வாக்கு பெற்றுள்ள வைத்திலிங்கம், ஏற்கனவே சசிகலா தரப்பினரோடு இணக்கமான தொடர்பில் இருப்பதாகவும், ஓ.பி.எஸ் ஆதரவாளராக உள்ள அவர், சசிகலாவின் ஆதரவை ஓ.பி.எஸ்ஸுக்கு பெற்றுத்தர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும், கிசுகிசுக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது எதிர்பாராதவிதமாக நடந்த இருவரது சந்திப்பும் தற்போது அரசியலில் பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....