Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்துலாம் முதல் மீனம் வரை இந்தவார ராசிபலன்கள்!

    துலாம் முதல் மீனம் வரை இந்தவார ராசிபலன்கள்!

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களே, இந்தவார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் அதிக அளவில் நடைபெறக் கூடிய நல்ல நாட்களாக உள்ளன. ஆன்மிக வழிபாட்டில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். நீங்கள் நினைத்தக் காரியங்கள் நடைபெறும்.

    அதனால் நீங்கள் மனம் மகிழ்வீர்கள். வாடிக்கையாளர்களைக் கவர புதுப் புது யுக்திகளைக் கையாளுவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ற வண்ணம் தனலாபம் அதிகரிக்கும். இருப்பினும் செலவுகளைக் குறைப்பது நல்லது. நமச்சிவாய மந்திரம் சொல்லுங்கள் நாளும் அவன் உங்களுடன் இருப்பான். 

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களே இந்தவார நாட்கள் உங்களுக்கு சற்று கவனம் அதிகம் தேவைப்படும் நாட்களாக உள்ளன. நீங்கள் எடுக்கும் முடிவுகளில் சற்று கவனமாக இருப்பது நல்லது. இருப்பினும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    பணியிடை மாற்றங்கள் அல்லது பதவி உயர்வுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆன்மிக வழிபாடுகளில் அதிகம் நாட்டம் எடுத்துக் கொள்வீர்கள். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். முயற்சிகளை மட்டும் எப்போதும் விட்டு விடாதீர்கள். அமைதி நிலைக்க ஓம் எனும் மந்திரத்தை மனதில் சொல்லியபடியே இருங்கள். 

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மனக் குழப்பங்கள் சற்று கூடிக் காணப்படும் நாட்களாக உள்ளன. நீங்கள் செய்யும் காரியங்கள் சிறிது கவனமுடன் இருப்பது. தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து தூய மனநிலையோடு இருங்கள். உங்களின் நம்பிக்கையும் உங்கள் பேச்சும் மட்டுமே இப்போதைய ஆயுதம். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். வரவுக்கு ஏற்ற செலவுகள் வந்துக் கொண்டே இருக்கும். நீங்கள் விரும்பிய காரியங்களுக்கு நண்பர்கள் உங்களுக்கு உதவுவார்கள்.     

    மகரம்:

    மகர ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. வீடு வண்டி வாகன வசதிகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த பணவரவு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். பிள்ளைகளால் உங்களுக்கு மன நிறைவு ஏற்படும்.

    உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முயற்சியால் வெற்றிக் கனிகளை எட்டிப் பறிப்பீர்கள். நல்ல நண்பர்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். முருகன் வழிபாடு வெற்றிகளைக் குவிக்க உதவும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களே இந்தவார நாட்கள் உங்களுக்கு வெற்றிகளைக் குவிக்கப் போகும் நல்ல நாட்களாக உள்ளன. போட்டித் தேர்வுகளில் வெற்றிகள் பெற வாய்ப்புண்டு. திருமண காரியங்கள் கைக்கூடி வரும்.

    வேலை செய்யும் பணியாளர்கள் உங்களுக்கு உதவுவார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற நல்ல நாட்களாக உள்ளன. வெளியில் செல்லும்போது கவனமுடனும் பொறுப்புடனும் இருப்பது அவசியம். குல தெய்வ வழிபாடு உங்கள் குலம் செழிக்க உதவும். 

    மீனம்: 

    மீன ராசிக்காரர்களே, இந்தவார நாட்கள் உங்களுக்கு நன்மை தீமைகள் இரண்டும் சேர்த்து நடைபெறும் நாட்களாக உள்ளன. நீங்கள் பேசும் வார்த்தைகளை கவனமுடன் கையாளுங்கள்.

    தேவையற்ற சிந்தனைகளைத் தவிர்த்து நன்முறையில் நடந்தால் குடும்பத்தில் ஒற்றுமை இருக்கும். தனவரவு இருக்கும் அதற்கு ஏற்றார்ப் போல் செலவும் ஆகும். ஆன்மிக வழிபாடு உங்களுக்கு மன அமைதியைத் தரும். உங்கள் எண்ணங்களைச் சீராக வைத்திருப்பது நல்லது.

    இதையும் படியுங்கள்,

    இந்தவார ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....