Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்உயரிய விருதான ஆஸ்கார் யார் யாருக்கு வழங்கப்பட்டது? முழு தகவல்கள் உள்ளே!

    உயரிய விருதான ஆஸ்கார் யார் யாருக்கு வழங்கப்பட்டது? முழு தகவல்கள் உள்ளே!

    சினிமா துறையை பொறுத்தமட்டில் உலகமே வியந்துப் பார்க்கும் விருது என்றால் அது ஆஸ்கார் விருதுதான். உள்ளூர் சினிமா ரசிகர்கள் ஆரம்பித்து உலக சினிமா ரசிகர்கள் வரை பலரின் கண்ணும் ஆஸ்கார் விருது நடைபெறுகிறது என்றால், அங்குதான் குவியும்!

    அப்படியான 94-வது ஆஸ்கார் விருதுகள் 2022 தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பலரின் கண்களும் காதுகளும் ஆஸ்கார் விருது எவருக்கென்று காணவும் கேட்கவும் துடிதுடித்துக் கொண்டிருக்கின்றன. 

    இப்படியான ஆவலை ஏற்படுத்தியிருக்கும் ஆஸ்கார் விருதுப் பட்டியலை இங்கு காண்போம்;
    • ஆஸ்கர் விருதில் சிறந்த திரைப்படத்திற்கான விருதை கோடா என்ற திரைப்படம் தட்டிச்சென்றது.
    • என்கான்டோ திரைப்படம் சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ஆஸ்கர் விருதுக்கு  தேர்வாகி உள்ளது.
    • குறும்படங்களில் சிறந்த அனிமேஷன் திரைப்படமாக ஆல்பர்டோ மில்கோ மற்றும் லியோ சான்செஸ் அவர்களின் தி விண்ட்ஷில்டு வைப்பர் திரைப்படம் அங்கீகரிக்கப்பட்டு ஆஸ்கார் விருதைப் பெற்றது. 
    • லைவ்- ஆக்‌ஷன் குறும்படங்களில் சிறந்த ஒன்றாக அனில் கரியா மற்றும் ரிஸ் அகமதுவின் லாங்க் குட்பை தேர்ந்தெடுக்கப்பட்டது. 
    நடிகர் நடிகைகள்
    • சிறந்த முன்னணி நடிகருக்கான விருதை யார் பெறப்போகிறார் என்ற ஆவல் அதிகப்படியானதாக இருந்த நிலையில், பலரும் எதிர்ப்பார்த்தைப் போலவே கிங் ரிச்சர்டு திரைப்படத்திற்காக வில் ஸ்மித் பெற்றார்.
    • சிறந்த துணை நடிகருக்கான விருதை கோடா திரைப்படத்திற்காக ட்ராய் கோட்சுர் என்பவர் பெற்றுள்ளார். 
    • ஜெஸ்ஸிகா ஜாஸ்டன் சிறந்த முன்னணி  நடிகைக்கான விருதை தி ஐஸ் ஆஃப் டேமி ஃபேயி (The Eyes of Tammy Faye) என்ற திரைப்படத்திற்காக பெற்றார். 
    • சிறந்த துணை நடிகைக்கான விருதை வெஸ்ட் ஸைடு ஸ்டோரி திரைப்படத்திற்காக அரியானா டி போஸ் பெற்றுள்ளார்.
    திரைக்கு வராமலே உழைத்தவர்கள்
    • சிறந்த ஒளிப்பதிவுக்கான விருதை டியுன் திரைப்படத்திற்காக கிரெய்க் ஃப்ரேஸர் பெற்றார். 
    • ஆடைவடிவமைப்பில் சிறந்து விளங்கியமைக்காக கிருயெல்லா திரைப்படத்தில் பணியாற்றிய ஜென்னி பெவன் ஆஸ்கார் விருதை தன்வசம் ஆக்கினார்.
    • தி பவர் ஆஃப் டாக் திரைப்படத்தை இயக்கிய ஜேன் கெம்பியன் சிறந்த இயக்கத்திற்கான விருதை வென்றார்.
    • சிறந்த முழு நீள ஆவணப்படத்திற்கான விருதை சம்மர் ஆஃப் சூல் திரைப்படமும், சிறந்த குறும் ஆவணப்படத்திற்கான விருதை தி குயின் ஆஃப் பேஸ்கட்பால் ஆவணப்படமும் பெற்றுச்சென்றது.
    • சிறந்த படத்தொகுப்புக்கான விருதை டியுன் திரைப்படத்திற்காக ஜோ வால்கர் பெற்றார். 
    • சர்வதேச திரைப்படங்களில் சிறந்த திரைப்படமாக ஜாப்பானிய திரைப்படம் டிரைவ் மை கார் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது.  
    • சிறந்த ஒப்பனைக்கான விருதை தி ஐஸ் ஆஃப் டேமி ஃபேயி திரைப்படத்திற்காக லிண்டா டவுட்ஸ், ஸ்டீபனி இங்க்ராம் மற்றும் ஜஸ்டின் ராலே பெற்றனர்.
    • டியுன் (dune) திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஹான்ஸ் சிம்மர் சிறந்த பின்னணி இசைக்காக ஆஸ்கர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
    • நோ டைம் டூ டை திரைப்படத்தில் இடம்பெற்ற நோ டைம் டூ டை பாடல், சிறந்த பாடலுக்கான விருதை தட்டிச்சென்றது. இப்பாடலுக்கு ஃபின்னியாஸ் ஓ’கானல் வரிகள் எழுத பில்லி எலிஷ்  இசையமைத்துள்ளார்.
    • சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்காக டியூன் திரைப்படத்தின் பேட்ரிஸ் வெர்மெட், ஸ்சுஸ்ஸானா சிபோஸ் அவர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 
    • சிறந்த ஒலியமைப்புக்காக டியுன் திரைப்படத்தில் பணியாற்றிய மேக் ரூத், மார்க் மங்கினி, தியோ கிரீன், டக் ஹெம்பில் மற்றும் ரான் பார்ட்லெட் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
    • டியுன் திரைப்படத்தின் பால் லம்பேர்ட், டிரிஸ்டன் மைல்ஸ், பிரையன் கானர் மற்றும் கெர்ட் நெஃப்சர் ஆகியோருக்கு சிறந்த விஷூவல் எஃபக்டஸ்க்காக ஆஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.
    எழுத்தாளர்கள் 
    • சிறந்த மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதைக்காக கோடா திரைப்படத்திற்காக சியான் ஹெடர் ஆஸ்கார் விருதை வென்றுள்ளார். 
    • சிறந்த எழுத்துக்காக பெல்ஃபாஸ்ட் திரைக்கதை எழுத்தாளர் கென்னத் பிரானாக் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். 

    ஆஸ்கார் விருதுகளில் டியுன் திரைப்படமும், கோடா திரைப்படமும் தங்களின் ஆதிக்கத்தை அதிகம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....