Monday, March 18, 2024
மேலும்
    Homeஜோதிடம்இந்தவார ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை!

    இந்தவார ராசிபலன் மேஷம் முதல் கன்னி வரை!

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல உற்சாகத்துடனும் முயற்சியுடனும் செயல்பட்டால் நீங்கள் செய்யும் காரியங்களில் வெற்றிகள் குவியும். பெண்கள் ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். பண விடயத்தில் மட்டும் சிறிது கவனமுடன் இருப்பது நல்லது. திருமண காரியங்கள் கைக்கூடி வரும். நன்மைகள் நடக்க அம்மன் வழிபாடு செய்யுங்கள். 

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு சிறிது கவனம் வைத்து நடக்க வேண்டிய நாட்களாக உள்ளன. தொழிலில் தனலாபம் கிடைக்கும். உயர் பதவிகள் பாராட்டுக்கள் குவியும். வெளியூர் பயன் மேற்கொள்ளும் போதும் வண்டி வாகனங்களில் செல்லும்போதும் கவனமுடன் இருப்பது நல்லது. இருப்பினும் பயணம் உங்களின் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்தால் காரியங்களைச் சாதிப்பீர்கள். நண்பர்களுடனான இணக்கம் அதிகரிக்கும். முதற்கடவுளான விநாயக வழிபாடு உங்களுக்கு நன்மையைத் தரும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. தொழிலில் எதிர்ப்பாராத முன்னேற்றங்கள் மூலம் தனலாபம் அதிகரிக்கும். மனத் தெளிவு உண்டாகும். நீங்கள் மனநிலையை சமாக வைப்பதால் எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் கிடைக்கும். திருமண வாய்ப்புகள் வரும் திருமணம் ஆனவர்களுக்கு வம்ச விருத்தி உண்டாகும். உங்களின் முயற்சிகள் வெற்றிபெற முருகன் வழிபாடு செய்யுங்கள். 

    கடகம்: 

    கடக ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு மகிழ்ச்சிகள் பொங்கும் நல்ல நாட்களாக உள்ளன. தொழிலில் பண வரவுக்கு பஞ்சம் இருக்காது. நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். பணம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். மகிழ்ச்சியாக இருக்க உங்களுக்கு பிடித்த காரியங்களில் ஈடுபடுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. புதிய பெண் நண்பர்களின் பழக்கம் உங்களுக்கு மன மகிழ்ச்சியைத் தரும். இன்பங்கள் நிலைக்க இறைவழிபாடு செய்யுங்கள். 

    சிம்மம்: 

    சிம்ம ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நாட்காளாக உள்ளன. ஆன்மிக வழிபாடு செய்வதில் நாட்டம் காட்டுவீர்கள். உங்களின் நம்பிக்கை மூலம் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம் உண்டு. செலவுகள் சற்று அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் உடனிருக்கும் பணியாளர்களின் உதவிகள் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் ஈடுபாடுடன் படித்தால் அதிக மதிப்பெண்களை பெறுவார்கள். நன்மைகள் நடக்க நாராயண வழிபாடு அவசியம். 

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களே, இந்த வார நாட்கள் உங்களுக்கு நன்மைகள் நடைபெறும் நல்ல நாட்களாக உள்ளன. உங்களின் விடா முயற்சியால் வெற்றிகளைக் குவிப்பீர்கள். நீங்கள் விரும்பும் காரியங்கள் நடைபெறுவதால் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். கணவன் மனைவி உறவில் பிரச்சனைகள் விலகி புரிந்துக்கொள்ளுதல் அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நீங்கள் எதிர்ப்பார்த்த பணவரவு கிடைக்கும். குல தெய்வ வழிபாடு மேலும் நன்மைகள் நடைபெற உதவும்.

    இதையும் படியுங்கள்,

    துலாம் முதல் மீனம் வரை இந்த வார ராசிபலன்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....