Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்ஐ.நா-விற்கு புதிய மனித உரிமை ஆணையர்; வெளிவந்த புதிய அறிவிப்பு..

    ஐ.நா-விற்கு புதிய மனித உரிமை ஆணையர்; வெளிவந்த புதிய அறிவிப்பு..

    ஐ.நா. மனித உரிமை ஆணையராக தூதரக உயரதிகாரி வோல்கர் டர்க் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ஐ.நா. மனித உரிமை ஆணையராக மிஷெல் பாஷலே பதவி வகித்து வந்தார். இந்நிலையில், அவரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 31-ம் தேதி நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து அடுத்த மனித உரிமை ஆணையர் யார் என்ற கேள்வி எழுந்தது. 

    இந்நிலையில், தற்போது ஐ.நா.வின் பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் அடுத்த மனித உரிமை ஆணையர் யார் என்பதை தெரிவித்துள்ளார். இவர் மனித உரிமை ஆணையர் பொறுப்புக்கு வோல்கர் டர்க்கின் பெயரை பரிந்துரைத்தார். 

    இந்த பரிந்துரைக்கு 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுசபை ஒப்புதல் அளித்தது. அதையடுத்து, ஐ.நா. மனித உரிமை ஆணையராக வோல்கர் டர்க் பொறுப்பேற்கிறார்.

    தற்போது, ஐ.நா. மனித உரிமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள வோல்கர் டர்க் முன்னதாக ஆஸ்திரேலியாவில் தூதரக உயரதிகாரியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....