Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகோடிக் கணக்கில் வந்த காணிக்கை.. வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையா?

    கோடிக் கணக்கில் வந்த காணிக்கை.. வரலாற்றிலேயே இதுதான் முதல் முறையா?

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்தியாவில் பிரசத்தி பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது திருமலா திருப்பதி திருத்தலம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு எப்போதும் வரும் பக்தர்கள், தரிசன செய்வதும் நேத்திக் கடன் செலுத்துவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரலாற்றில் முதல்முறையாக ஆகஸ்ட் மாதத்தில் ரூ.140.34 கோடி காணிக்கை கிடைக்க பெற்றுள்ளது. கோயிலில் ஆகஸ்ட் மாதத்தில் 22.22 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்து ரூ.140.34 கோடி காணிக்கை செலுத்தியுள்ளனர். இதை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்தது. 

    ஏழுமலையான் கோயிலில் இருக்கும் உண்டியல்களில், பக்தர்கள் காணிக்கை செலுத்துவது இயல்பான ஒன்று. கொரோனா காலக்கட்டத்தில் பெரிதும் கூட்டம் வராத நிலையில் கடந்த ஒரு வருடமாக திருப்பதியில் கூட்டம் அலைமோதுவது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....