Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுகள்ளக்குறிச்சி பள்ளியில் மீண்டும் சர்ச்சை! செய்தி சேகரிக்க சென்ற நிரூபர், கேமராமேன் மீது தாக்குதல்

    கள்ளக்குறிச்சி பள்ளியில் மீண்டும் சர்ச்சை! செய்தி சேகரிக்க சென்ற நிரூபர், கேமராமேன் மீது தாக்குதல்

    கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு சென்ற செய்தியாளர் மற்றும் புகைப்பட கலைஞர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

    கடந்த ஜூலை 13-ம் தேதி கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி இறந்து போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த உயிரிழப்புத் தொடர்பாக போராட்டத்தின் போது வன்முறை உருவானது. இந்த வன்முறையின்போது, பள்ளி பொருட்கள் சேதப்படுத்தப்பட்டன. 

    இந்த கலவரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி, தொடர்ந்து கைது நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில், மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரத்தில் கலவரத்தின் போது சிதைந்து போன பள்ளியை சீரமைப்பது தொடர்பான அனுமதியை வழங்கி மாவட்ட ஆட்சியர் ஷர்வன் குமார் ஜடாவத் உத்தரவிட்டார். 

    மேலும், பள்ளியின் மறுசீரமைப்பு செய்ய 45 நாட்கள் அனுமதி வழங்கியும், பள்ளி கட்டடங்களை மறுசீரமைப்பு தவிர இதர பணிகளை மேற்கொள்வது உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உட்பட்டது என்றும் உத்தரவிட்டார். 

    இதையும் படிங்க: பாஜக உத்தம ராமசாமி திடீர் கைது.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

    இந்நிலையில், கட்டடங்களை மறுசீரமைக்கும் பணியை புகைப்படம் எடுக்க சென்னையில் உள்ள நக்கீரன் வாரப்பத்திரிக்கை தலைமை சிறப்பு செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், புகைப்பட கலைஞர் அஜீத்குமார் ஆகியோர் காரில் வந்தனர். 

    இவர்கள் புகைப்படம் எடுக்கும்போது, அங்கு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவர்களை தடுத்ததுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து செய்தியாளரும், புகைப்பட கலைஞரும் காரில் ஏறி புறப்பட்டனர். அப்போது அங்கு பணியில் இருந்த சிலர் டூவீலரில் காரை விரட்டினர். தலைவாசல் பகுதி அருகே காரை மறித்து நிறுத்தி, செய்தியாளர் தாமோதரன் பிரகாஷை கடத்திச் செல்ல முயன்றனர். புகைப்பட கலைஞர் அஜீத்குமாரை சரமாரியாக தாக்கினர். 

    இதைக்கண்ட பொதுமக்கள் என்னவென்று விசாரிக்க, அதற்கு அவர்கள், தங்களது டூவீலர் மீது காரை மோதி விட்டு, நிற்காமல் வந்து விட்டனர் எனக் கூறி, மீண்டும் அவரை தாக்கினர். இதையடுத்து, பொதுமக்கள் அவர்களை, அருகில் இருந்த தலைவாசல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு பணியில் இருந்த காவல்துறை அதிகாரி சின்னசேலம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கும்படி கூறியதால், அவர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். 

    இச்சம்பவத்தை அடுத்து, செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ் கூறுகையில், ‘கனியாமூர் பள்ளி நிர்வாகத்திற்கு ஆதரவாக இருக்கும் மோகன், அதிமுக ஒன்றிய கவுன்சிலர் ராஜசேகரன், பள்ளி நிர்வாகியின் தம்பி அருள் சுபாஷ் ஆகியோர் தலைமையிலான கும்பல், என்னை தாக்கி, கொலை செய்யும் நோக்கில் எனது காரிலேயே கடத்திச்செல்ல முயன்றனர். அங்கு வந்த பொதுமக்கள், என்னை அவர்களிடம் இருந்து மீட்டனர். எனது செல்போன் மற்றும் மோதிரம் ஆகியவற்றை பறித்து சென்றுவிட்டனர்’ என்றார். 

    காயமடைந்த செய்தியாளர் தாமோதரன் பிரகாஷ், கேமராமேன் அஜீத்குமார் ஆகியோர், ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஆபாச வீடியோக்கள் விற்பனை செய்யும் தளமாக மாறி வரும் ட்விட்டர் – மகளிர் ஆணைய தலைவர் குற்றச்சாட்டு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....