Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாஜக உத்தம ராமசாமி திடீர் கைது.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

    பாஜக உத்தம ராமசாமி திடீர் கைது.. ஆ.ராசாவிற்கு மிரட்டல் விடுத்ததாக குற்றச்சாட்டு

    திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசாவை கண்டித்து மிரட்டல் காணொளி வெளியிட்டதற்காக கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டுள்ளார். 

    இந்து மதம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா மீது பல்வேறு புகார்கள் பதிவாகி வருகின்றன. 

    இந்நிலையில், பாஜக கட்சியினர் பலரும் ஆ.ராசாவை கண்டித்து கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, கோவை மாவட்ட பாஜக தலைவர் ஆ.ராசாவை கண்டித்து பேசிய காணொளி சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதனை வைத்து தந்தை பெரியார் திராவிட கழகத்தை சேர்ந்தவர்கள் இவர் மீது புகார் மனு அளித்துள்ளனர். 

    இதையும் படிங்க: சென்னையில் ‘கஞ்சா கேக்’! தூண்டிலில் சிக்கிய மாணவர்கள்.. பகீர் கிளப்பும் அதிர்ச்சி தகவல்கள்

    இந்த மனுவை விசாரித்த காவல்துறையினர் உத்தம ராமசாமியை கைது செய்துள்ளனர். இந்நிலையில், கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டதை கண்டித்து பீளமேடு காவல் நிலையம் அருகே பாஜகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

    மேலும், கைதான உத்தம ராமசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....