Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுவாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தந்த ‘ஈ’ - மனம் நொந்து கெஞ்சிய ஆவின் அதிகாரிகள்

    வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தந்த ‘ஈ’ – மனம் நொந்து கெஞ்சிய ஆவின் அதிகாரிகள்

    மதுரையில் விநியோகிக்கப்பட்ட ஆவின் பால் பாக்கெட்டில் ‘ஈ’ இறந்து மிதந்து கிடந்ததால் நுகர்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 

    மதுரை ஆவின் பாலகம் சார்பில், கவ், கோல்டு, எஸ்.எம்., – நிலைப்படுத்தப்பட்ட பால், டீ மேட் உட்பட ஐந்து வகையான பால் பாக்கெட்டுகள் 5 லட்சத்திற்கும் அதிகமான எண்ணிக்கையில் தயாரிக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 40-க்கும் மேற்பட்ட வழித்தடங்கள் மூலம் ஆயிரத்துக்கும் அதிகமான டெம்போக்களின் மூலமாகவும் நுகர்வோர்களுக்கு விநியோகிக்கப்படுகின்றன. 

    இதையும் படிங்க: திமுகவின் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம் – பாஜக அண்ணாமலை கண்டனம்

    இந்நிலையில், ஆரப்பாளையம் மண்டலத்திற்கு உட்பட்ட 33-வது வழித்தடத்தில் பால் வேன் மூலமாக நாகமலை, புதுக்கோட்டை, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம், கீழமாத்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு பால் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன .

    இதனிடையே, மதுரை காமராஜ் பல்கலைக்கழகம் அருகே பெண் நுகர்வோர் ஒருவர் அரை லிட்டர் எஸ்.எம்., பச்சை நிற பாக்கெட்டை வாங்கினார். அப்போது அந்த பால் பாக்கெட்டில், ‘ஈ’ இருப்பதை கவனித்த அந்தப் பெண், அதை பால் வேன் வாகன ஓட்டியிடம் திருப்பி தந்துவிட்டார். 

    இத்தகவல் அறிந்து டெப்போவிற்கு சென்ற ஆவின் நிர்வாக அதிகாரிகள், அந்த பாக்கெட்டை பெற்று, சம்மந்தப்பட்ட பாக்கெட் குறித்த காணொளி, புகைப்படம் இருந்தால் வெளியிட வேண்டாம்’ என டெப்போ உரிமையாளரிடம் அறிவுறுத்தி சென்றதாகச் சொல்லப்படுகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....