Saturday, March 16, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் ரெய்டு! ஜிஎஸ்டியால் வந்த சிக்கல்

    நடிகர் சூரிக்கு சொந்தமான அம்மன் உணவகத்தில் ரெய்டு! ஜிஎஸ்டியால் வந்த சிக்கல்

    ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலித்த நடிகர் சூரியின் உணவகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

    தற்போதைய சூழலில் தமிழ் திரையுலகின் முக்கிய நகைச்சுவை நடிகர், சூரி. இவருக்கு மதுரை அம்மன் உணவகம் என்ற பெயரில் உணவகம் உள்ளது. இந்த உணவகமானது, மதுரை தெப்பக்குளம், அரசு மருத்துவமனை, ஊமச்சிகுளம் உள்ளிட்ட பல இடங்களில் அமைந்துள்ளது. இந்த உணவகங்களுக்கு எல்லாம் தலைமை அலுவலகம் மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ளது. 

    இந்த அம்மன் உணவகத்தில் வணிக வரித் துறையினர் நேற்று மாலை சோதனை நடத்தினர். இங்கு வணிகவரித் துறை அதிகாரி செந்தில் தலைமையில் 5 பேர் கொண்ட குழு சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது முக்கிய ஆவணங்களை அவர்கள் கைப்பற்றினர். இங்கு ஜிஎஸ்டி இல்லாமல் உணவுக்கான கட்டணத்தை வசூலிப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதன் பேரில் சோதனை நடத்தப்பட்டது.

    இந்த சோதனையில் உணவகங்களுக்கு மொத்தமாக கொள்முதல் செய்த உணவு பொருட்களுக்கு ஆவணங்கள் இல்லை என தெரியவந்தது. மேலும், ஜிஎஸ்டி இல்லாமல் கட்டணம் வசூலிப்பதும் தெரியவந்தது. இந்த புகார்கள் குறித்து 15 நாட்களுக்குள் நடிகர் சூரி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டுமென வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

    இதையும் படிங்க: ஜி.பி.முத்துவுடன் அதிவேக பயணம்… யூடியூபர் டிடிஎப் வாசனுக்கு எதிராக வழக்குப் பதிவு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....