Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:10 நாளுக்கு பின் பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி:10 நாளுக்கு பின் பொதுவெளியில் தோன்றினார் சீன அதிபர் ஜி ஜின்பிங்!

    சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடந்து கொண்டிருக்கும் கண்காட்சியில் பங்கேற்றுள்ளதன்  காரணமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்ததாக வெளியான வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

    சீன அதிபர் ஜி ஜின்பிங் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி உஸ்பெகிஸ்தான் தலைநகர் சாமர்கண்ட்டில் நடந்த ஷாங்காய் உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு சீன நாட்டுக்கு திரும்பினார். 

    இந்த உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு அவர் திரும்பியபோது, விமான நிலையத்தில் வைத்தே சீன ராணுவத்தினர் அவரை கைது செய்ததாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வந்தன. 

    மேலும், சீன அதிபர் வீட்டு சிறையில் இருப்பதாகவும், சீன ராணுவ தலைவர் பதவியிலிருந்து அவர் நீக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியானது. 

    அதோடு, சீனாவின் அடுத்த அதிபராக ராணுவத் தளபதி லீ கியாமிங் பொறுப்பேற்றுக் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் பேசப்பட்டது. 

    இந்நிலையில், சீன அதிபர் ஜி ஜின்பிங் பெய்ஜிங்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் கண்காட்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். 

    china president

    இதன்மூலமாக வீட்டு காவலில் வைக்கப்பட்டிருந்ததாக வெளியான வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. 

    இது தொடர்பான சீன அதிபரின் காணொளிகளும் புகைப்படங்களும் இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றன.

    இதையும் படிங்க: ‘பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா’ செயல்பாடுகள் 5 ஆண்டுகளுக்கு முடக்கம் – மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....