Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இலங்கைஇலங்கை கொழும்பு அருகே பயங்கர தீ விபத்து; 80-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

    இலங்கை கொழும்பு அருகே பயங்கர தீ விபத்து; 80-க்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து நாசம்

    இலங்கை தலைநகர் கொழும்புவில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 வீடுகள் முற்றிலும் எரிந்து நாசமாகியுள்ளது.

    இலங்கை தலைநகர் கொழும்புவில், 4 ஏக்கர் நிலத்தில் 300 வீடுகள் அருகருகே கட்டுப்பட்டு உள்ளன. பெரும்பாலும் தினக்கூலிகள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோர் இங்கே வசித்து வந்தனர்.  

    இதனிடையே, காஜிமாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்புகளில் நேற்று (செப்டம்பர் 27) மாலை தீ விபத்து ஏற்பட்டது.

    தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், தீயைக் கட்டுப்படுத்த 12-க்கும் மேற்பட்ட தீயணைப்பு இயந்திரங்களை பயன்படுத்தினர். 

    இந்த தீ விபத்தில், எந்தவித உயிர்ச்சேதங்களும் இல்லை என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 80 வீடுகள் சேதமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், தீ விபத்தினால் 220 பேர் தங்களின் வீடுகளை இழந்துள்ளனர். இவர்கள் தற்போது வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். 

    இந்த சம்பவம் குறித்து, விசாரிக்கும்படி இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங் உத்தரவிட்டுள்ளார்.

    இதையும் படிங்க: அக்டோபர் மாதத்தில் மட்டும் 21 நாள்களுக்கு விடுமுறையா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....