Monday, May 6, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்அமெரிக்காவில் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பொறுப்பேற்பு

    அமெரிக்காவில் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளி பெண் பொறுப்பேற்பு

    அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தின் துணைநிலை ஆளுநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அருணா மில்லர் பதவியேற்றிருக்கிறார்.

    இந்தியாவின் ஹைதராபாத்தில் பிறந்த அருணா மில்லர், தான் 7-ஆவது வயதில் இருக்கும்போது அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். அருணாவின் தந்தை வேலைக்காக அமெரிக்கா செல்லவே, அவரின் குடும்பம் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது. 

    இதைத்தொடர்ந்து, அருணா மில்லர் அமெரிக்காவில் தன் வாழ்வை வாழத்தொடங்கினார். தற்போது 58 வயதாகும் அருணா கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மேரிலேண்ட் மாகாண துணைநிலை ஆளுநர் பதவிக்கான தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகக் களமிறங்கி வெற்றி பெற்றார். 

    இந்நிலையில், தற்போது அருணா துணைநிலை ஆளுநராக பதவியேற்றுக்கொண்டார். இந்துக்களின் புனித நூலாக கருதப்படும் பகவத் கீதை மீது சத்தியம் செய்து அவர் பதவி ஏற்றார். இவர் பதவி ஏற்றதைத் தொடர்ந்து, மேரிலேண்ட் மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்ற முதல் பெண் என்ற பெருமையும், முதல் இந்தியர் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளார். 

    மண்டல பூஜை நிறைவு; சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைப்பு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....