Monday, March 18, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமாற்றுத்திறனாளிகளுக்கான செலவினத் தொகை அதிகரிப்பு!

    மாற்றுத்திறனாளிகளுக்கான செலவினத் தொகை அதிகரிப்பு!

    அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தன்சுத்தம் உடல்நலம் பராமரிப்பதற்காக வழங்கப்படும் செலவினத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த கடந்த ஏப்ரல் 21 ஆம் தேதி 2022-2023ஆம் ஆண்டிற்கான மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் மானியக் கோரிக்கையின்போது , “22 அரசு பள்ளி விடுதிகளில் தங்கி பயிலும் 1053 மாணாக்கர்களுக்கு தன்சுத்தம், உடல் நலம் பராமரிப்பதற்காக வழங்கும், சோப்பு, தேங்காய் எண்ணெய் வழங்குவதற்கான இதர செலவினம் ரூ.30/-லிருந்து ரூ.50/-ஆக உயர்த்தி ரூ.2.52 லட்சம் செலவில் திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

    மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் விடுதிகளில் தங்கிப் பயிலும் சிறப்புப் பள்ளி தொழிற் பயிற்சி பள்ளி மற்றும் மறுவாழ்வு இல்லங்களில் மாணவ, மாணவிகளுக்கு பராமரிப்பதற்காக வழங்கப்படும் செலவின தொகை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், அரசு பள்ளி விடுதிகளில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்கள், தன்சுத்தம் உடல்நலம் பராமரிப்பதற்காக வழங்கப்படும் செலவின தொகை உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது மாணவர்களுக்கு இடையே பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.

    கடந்த வருடம் அக்டோபர் மாதம், பண்டிகை நாட்களில் வழங்கப்படும் சிறப்பு உணவு கட்டணத் தொகை பள்ளி விடுதி மாணவர்களுக்கு ரூ. 40ஆகவும், கல்லூரி விடுதி மாணாக்கர்களுக்கு ரூ.80 ஆகவும் உயர்த்தி வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    விலைவாசி ஏற்றத்தின் காரணமாக, சிறப்பு உணவு கட்டணத் தொகை ஏற்றப்பட்டதாக அப்போது கூறப்பட்டது.

    கோடைக்கு ஏற்ற நம்ம பாரம்பரிய கேப்பைக்கூழ் செய்து ருசித்துக் குடிக்கலாம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....